குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்த போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
குக்கு வித் கோமாளி விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இதுவரை மூன்று சீசன்கள் முடிந்து தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய 4வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த முறை யாரும் எதிர்பார்க்காத பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த மூன்று சீசனில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இம்முறை குக்காக மாறி சமையலில் சிறந்து விளங்கினார்.
அதே போல இந்த சீசனில் விசித்ரா, மைம் கோபி, சிருஷ்டி, கிரண் மற்றும் ஷிவாங்கி ஆகியோர் முதல் 5 போட்டியாளர்களாக இருப்பதால், நடிகை விசித்ரா முதல் பைனலிஸ்ட் ஆவார். அவரைத் தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மீதமுள்ள மூன்று பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்
இது தொடர்பான நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதைத் தொடர்ந்து போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு வைல்ட் கார்டு சுற்று நடைபெற்றது. இதற்கான ஷுட் முடிந்துவிட்டதாகவும், அதில் ஆண்ட்ரியன் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.