நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.. மேலும் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், சங்கீதா கிரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.. பிரவீன் எடிட்டிங் செய்கிறார்.. கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்..
இப்படத்தின் ஐந்தாம் கட்டப்பட பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது . அதை தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்றது.. இதில் விஜய் தொடர்பான காட்சி இணையத்தில் லீக்கானதால் படப்பிடிப்பில் செல்போன் கொண்டு வர தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் நடிகர் விஜய் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அடுத்த மாதம் முதல் வானகரத்தில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது..
அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஈசிஆரில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் அந்த அரங்கத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.. அப்போது எடுத்துக் கொண்டதாக கூறப்படும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் விஜய் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. எனினும் ஜவான் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை..