fbpx

’நீங்க ஒன்னும் பிக்பாஸ் கிடையாது’..! 2-வது நாளே ஆரம்பித்த சண்டை..!! பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளுக்கான 2-வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கிய நிலையில், போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல். தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக முதல்நாள் போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. 

’நீங்க ஒன்னும் பிக்பாஸ் கிடையாது’..! 2-வது நாளே ஆரம்பித்த சண்டை..!! பரபரப்பு வீடியோ

இப்போது வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் வீடு ரணகளமாக காணப்படுகிறது. டீ காபி குடிப்பதற்கு கூட இந்த வீட்டில் சண்டை வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதில், கிச்சன் டீமின் தலைவர் ஷிவின், மொரட்டு தனமாக ஹவுஸ் மேட்களுக்கு விளக்கம் கொடுக்கிறார். பிறகு, மகேஷ்வரியும் அஸீமும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். ஆரம்பித்த 2-வது நாளே சண்டையா..? என்ன கொடுமை சரவணன் இது என்பது போல் இருக்கிறது இந்த ப்ரோமோ.

’நீங்க ஒன்னும் பிக்பாஸ் கிடையாது’..! 2-வது நாளே ஆரம்பித்த சண்டை..!! பரபரப்பு வீடியோ

காலையில் வந்த முதல் ப்ரோமோவில், நான்கு அணிகளாக பிரிக்கப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு, ஒரு காமெடியான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், கிச்சன் டீமில் உள்ள நபர்கள், ஹவுஸ் மேட்ஸ் கேட்டால் உணவை ஊட்டி விட வேண்டும். அதுபோல், பாத்ரூம் டீமில் உள்ளவர்கள், ஹவுஸ் மேட்ஸுக்கு பாத்ரூம் வந்தால் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்று கழிப்பறை வரை அவர்களை அழைத்து செல்ல வேண்டும். இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்படும் அணி, சிறந்த அணியாக அறிவிக்கப்படும் என்று பிக்பாஸ் டாஸ்க் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று வந்த முதல் இரண்டு ப்ரோமோவும் முரண்பாடாக உள்ளது. முதல் ப்ரோமோ காமெடியாகவும், இரண்டாவது ப்ரோமோ சற்று கடுப்பாகவும் காணப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சியில், நேற்றை விட பெரிய கண்டெண்ட் இருக்கிறது என நன்றாக தெரிகிறது.

Chella

Next Post

சென்னை புறநகர் ரயிலில்  புதிய வசதி…. இனி நீங்கள் குளு குளுனு பயணம் செய்யலாம்.

Tue Oct 11 , 2022
புறநகர் ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து இயக்குவது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகரில் உள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் சபர்பன் எனப்படும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி , சென்னை கடற்கரை முதல் தாம்பரம் , சென்னை கடற்ரை முதல் வேளச்சேரி , சென்னை கடற்கரை […]

You May Like