fbpx

”இதெல்லாம் ஒரு படம்ன்னு என்னை பிரிவ்யூ பார்க்க தைரியமா கூப்பிட்டுருக்க”..!! உதறி தள்ளிய உதயநிதியின் சகோதரி..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என பலர் நடிப்பில் நேற்றைய தினம் வெளியான திரைப்படம் ’மாமன்னன்’. இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், மாமன்னன் ப்ரோமோஷன் தொடர்பாக உதயநிதி பங்கேற்ற ஒரு நேர்காணலில், ‘உங்களை முதல் படத்தில் இருந்தே நடிகராக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். என்னதான் வெளியில் பாராட்டினாலும் வீட்டில் செல்லமாக கிண்டல் செய்த படம் ஏதாவது இருக்கிறதா?’ என உதயநிதியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு உதயநிதி, “படம் பேர் சொல்ல மாட்டேன். எடுத்த எங்களுக்கே கடைசி வரை அது பேய் படமா, காமெடி படமா என தெரியல. அந்த படம் நல்லா ஓடுச்சி. அப்பதான் எனக்கு ஒன்னு புரிஞ்சிது. இதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை என்ன என்பது தெரிந்தது. அந்த படத்தை என்னுடைய குடும்பத்தினருக்கு பிரிவ்யூ போட்டேன். இடைவேளைக்கு பின் என் சகோதரியை காணவில்லை.

உடனே போன் பண்ணி ஏதாவது அவசர வேலையா வீட்டுக்கு போய்ட்டியா, ஆளை காணோமே என கேட்டேன். அதற்கு அவர் “இதெல்லாம் ஒரு படம்ன்னு எடுத்து என்னை பிரிவ்யூ பார்க்க தைரியமா கூப்பிட்டுருக்க” எனக் கலகலப்பாக கூறி இருக்கின்றார்.

Chella

Next Post

பட்டப்பகலில் பயங்கரம்..!! வாலிபரை சுற்றி வளைத்து ஓங்கி ஓங்கி குத்திய கொலையாளிகள்..!! நடந்தது என்ன..?

Fri Jun 30 , 2023
தெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை பகுதியில் சந்தோஷ் என்ற இளைஞரை வழிமறித்த 3 பேர், அவரை மாறி மாறி கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். பின்னர், 3 பேரில் ஒருவர் சந்தோஷின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பொதுமக்கள் ஒன்று கூடியதை அடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து […]
பட்டப்பகலில் பயங்கரம்..!! வாலிபரை சுற்றி வளைத்து ஓங்கி ஓங்கி குத்திய கொலையாளிகள்..!! நடந்தது என்ன..?

You May Like