fbpx

அதிக சம்பளம் கொடுத்தும் பிக்பாஸுக்கு வர மறுக்கும் இளம் நடிகைகள்..!! காரணம் இதுதானா..?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த பல இளம் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பங்கேற்க போட்டிப் போட்டனர். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் தங்கள் வாழ்க்கையில் எந்தவொரு மாற்றமும் நடக்காததை தெரிந்து கொண்ட பலரும், கடந்த சில சீசன்களாக அதிக சம்பளம் கொடுக்கிறோம் என அழைப்பு விடுத்தாலும் பெரிய கும்பிடு போட்டு வருகின்றார்களாம்.

பட வாய்ப்பு கிடைக்காமல், ஃபீல்ட் அவுட்டான நடிகைகள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்தே கலந்து கொண்டனர். நடிகைகள் ஓவியா, ரைசா வில்சன், மும்தாஜ், அபிராமி, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, வனிதா விஜயகுமார், ரேகா, மும்தாஜ், அனுயா, மீரா மிதுன், காயத்ரி, கஸ்தூரி, ஷெரின், ரம்யா பாண்டியன், பிந்து மாதவி, ஜனனி என ஒரு பெரிய லிஸ்டே உள்ளது. சினிமாவில் சின்னதாக இடைவெளி விழுந்ததும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் சினிமாவில் பெரிய நடிகையாக வலம் வரலாம் என திட்டமிட்டு உள்ளே வந்தனர்.

ஆனால், பல நடிகைகள் அப்படியே பழைய நிலைமை விட மோசமான நிலைக்கு சென்று விடும் சூழல் கடந்த பல சீசன்களிலும் பார்த்து ரசிகர்களை விட நடிகைகளும், நடிகர்களும் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டனர். முதல் பரிசு ரூ.50 லட்சம் என்பதை 6 சீசன்களாக உயர்த்தாமல் அப்படியே நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். மேலும், தினமும் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நாளைக்கும் நடிகர்களின் செல்வாக்கிற்கு ஏற்ற அளவுக்கு தனியாக சம்பளமும் கொடுக்கப்படுகிறது. விஜய் டிவி பிரபலங்கள் என்றால் அதிகபட்சம் ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் கொடுக்கப்படுகிறது.

இதுவே இளம் நடிகர்கள், நடிகைகள் என்றால் ரூ.2 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது. ஆனால், அதை விட கூடுதலாக கொடுக்க தயாராக இருந்தாலும், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கடந்த சில சீசன்களாக நடிகர்கள் மற்றும் இளம் நடிகைகள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவே இல்லை. இந்த சீசனிலும் சில நடிகைகளை பங்கேற்க வைக்க பல முயற்சிகளை பிக்பாஸ் டீம் செய்து வருவதாகவும், ஆனால், இன்னமும் யாரும் சிக்கவில்லை என தகவல்கள் கசிந்துள்ளன.

Chella

Next Post

சமையலில் தக்காளியை சேர்த்த கணவன்..!! கடுப்பில் வீட்டை விட்டு வெளியேறிய மனைவி..!! ஏன் தெரியுமா..?

Thu Jul 13 , 2023
சமையலில் தக்காளியை, தன்னிடம் கேட்காமல் கணவன் சேர்த்ததால் கோபம் அடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. சமீப நாட்களாக நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.140-ஐ தாண்டி உள்ளது. ஏழை மக்கள், தங்களது வருமானத்தில் பாதியை தக்காளிக்கே செலவு செய்ய வேண்டிய உள்ளதால், அவர்கள் தக்காளியை சமையலில் சேர்த்துவதை குறைத்து வருகின்றனர். ஓட்டல்கள், உணவகங்கள், உணவு தயாரிப்பாளர்களை பதம் பார்த்துள்ளது. […]

You May Like