fbpx

ராஜ்கிரண் மகளுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்த ZEE தமிழ்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

ராஜ்கிரண் மகள் பிரியாவுக்கும், அவரது காதலன் முனீஸ்ராஜாவுக்கும் ஜி தமிழ் டிவி திருமணம் செய்து வைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 90-களில் கலக்கியவர் நடிகர் ராஜ்கிரண். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே இருந்தது. முன்னணி நட்சத்திரங்களுக்கு இணையாக ராஜ்கிரண் படம் வசூல் சாதனை படைத்தது. 1989ஆம் ஆண்டு ’என்னை பெத்த ராசா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்கினர். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் ராஜ்கிரண். தற்போதும் படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார். வயது காரணமாக ராஜ்கிரண் தற்போது கதாநாயகர்களுக்கு அப்பா, மாமா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ராஜ்கிரண் மகளுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்த ZEE தமிழ்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

இந்நிலையில், ராஜ்கிரண் மகள் பிரியா வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்து வந்த முனீஸ் ராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்திற்கு ராஜ்கிரண் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் அதனால் வீட்டை விட்டு வெளியேற காதலித்தவரை கரம்பிடித்துவிட்டதாகவும் அவரது மகள், கணவர் முனிஸ்ராஜா உடன் சேர்ந்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ராஜ்கிரண் அவர் என் மகளே இல்லை நான் தத்து எடுத்து வளர்த்தவர். இந்த திருமணத்திற்கு பிறகு எனக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

ராஜ்கிரண் மகளுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்த ZEE தமிழ்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

இந்நிலையில், தற்போது ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் முனீஸ்ராஜாவுக்கும் பிரியாவுக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளது. இதனால் ராஜ்கிரண் மகள் நெகிழ்ச்சியில் அழுதுள்ளார். இந்த ப்ரோமோவை தற்போது ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது.

https://youtu.be/eHVakS4D4Ok

Chella

Next Post

பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அண்ணாமலை..? புதிய தலைவர் இவர்தானாம்..!!

Thu Oct 6 , 2022
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமெரிக்கா சென்றுள்ள நிலையில், கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அவரை நீக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி புரிந்து வந்தாலும், மத்தியில் அதிகாரத்தில் இருந்து வந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் இன்னமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளர முடியவில்லை. இதுகுறித்த ஆதங்கம் கட்சி மேலிடத்துக்கும் இருந்து கொண்டுதான் உள்ளது. இந்த வருத்தத்தை போக்கும் […]

You May Like