ஒருவரின் மாற்றுத் திறன் வேலையின் திறனைப் பாதிப்பதாக இருந்தால் மட்டுமே வேலை மறுக்க முடியும், அப்படி இல்லையெனில் பணி அளிக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவுபடுத்தியுள்ளது.
பாலமுருகன் என்பவர் சிஐஎஸ்எஃப் (CISF) காவலர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வை வெற்றிகரமாக முடித்தார். ஆனால், அவரது வலது கையில் 6 விரல்கள் உள்ளன என்பதையே காரணமாகக் கூறி அவரை தகுதிநீக்கம் செய்ததைக் கண்டித்து, அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.இளங்கோவன் மற்றும் எம்.ஜயராமன், முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்தனர். மாற்றுத் திறனாளிகளின் உடல் குறைபாடு, வேலைக்கேற்ப அவர்களின் திறனை பாதிப்பதில்லை என்றால், அவர்களை வேலைக்குத் தகுதியற்றவர்களாக மறுக்க முடியாது. மாற்றுத் திறன் மட்டுமே அடிப்படையாக வைத்து வேலை வாய்ப்பு மறுப்பது சட்டபூர்வமாகச் செல்லாது என்றார்.
மனுதாரரான பாலமுருகனுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்த, அரசு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு எதிர்காலத்தில் பல்வேறு அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக நடக்கும் தவறான தீர்வுகளுக்கு எதிரான முன்னோடியான தீர்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: செப்டம்பர் மாதத்தில் இருந்து ஏடிஎம்களில் 500 ரூபாய் கிடைக்காதா? தீயாக பரவும் தகவல்.. உண்மை என்ன?