நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட துவக்க விழாவில் எம்.பிக்கும், எம்.எல்.ஏவுக்கும் மோதல் ஏற்பட்ட சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
தமிழ்நாடு முழுவதும் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டது.. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார். மற்ற மாவட்டங்களிலும் திட்டம் வைக்கப்பட்டது.. அந்த வகையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, சக்கம்பட்டி அருகே ஒரு தனியார் மண்டபத்தில் இந்த விழா நடைபெற்றது.
இந்த அரசு விழாவின் வரவேற்பு பேனரில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் படம் மட்டும் இருந்தது.. இதனால் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ்ச்செல்வன் கோபத்துடன் மேடைக்கு வந்தார்.. மேலும் புரோட்டோக்கால் படி தேனி எம்.பியின் படம் ஏன் வரவேற்பு பேனரில் இடம் பெறவில்லை என தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார்.. மேலும் திமுக எம்.எல்.ஏவை ‘முட்டா பய’ என்று கூறியுள்ளார்.
இதனால் கோபமான மகாராஜன், ” யாரைப் பார்த்து முட்டாப் பய-ன்னு சொல்ற.. ராஸ்கல்,, யாருடா நீ” என்று எம்.பி தங்க தமிழ்ச்செல்வனை ஒருமையில் திட்டினார்.. மேலும் நலத்திட்ட உதவிகளை தானே வழங்குவேன் என்று மகாராஜான் கூறியதால் இந்த மோதல் முற்றியது.. மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே இந்த நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.. மேலும் அரசு விழாவும் பாதியிலேயே முடிக்கப்பட்டது.. மாவட்ட ஆட்சியர், எம்.பி, எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பாதியிலேயே புறப்பட்டு சென்ற நிலையில் முகாம் மட்டும் தொடர்ந்து நடந்தது..
எம்.பிக்கும், எம்.எல்.ஏவுக்கு இடையே உள்ள ஈகோ பிரச்சனையே இந்த மோதலுக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்..
Read More : நோயாளிகளை இனி மருத்துவ பயனாளிகள் என்று அழைக்கலாம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..