வீட்டில் கடவுளை வழிபடும் போது ஏற்றப்படும் குத்துவிளக்கு சாதாரண உலோகப் பொருளாக மட்டும் அல்ல, தெய்வீக அருளின் அடையாளமாகக் கருதப்படுகிறது. குத்துவிளக்கின் அடிப்பகுதியில் பிரம்மா, நடுப்பகுதியில் மகாவிஷ்ணு, மேற்பகுதியில் சிவபெருமான் உறைவதாக ஐதீகம் கூறுகிறது. மேலும் அலைமகள், மலைமகள், கலைமகள் உள்ளிட்ட பல தேவிகளும் ஆன்மிக சக்திகளும் குடிகொண்டிருப்பதாக நம்பப்படுவதால், அனைத்து வீடுகளிலும் குத்துவிளக்கு பக்தியுடன் வைக்கப்படுகிறது.
கடவுளின் அம்சமாக கருதப்படும் இந்த குத்துவிளக்கை சில குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்.. மீறினால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது. எந்தெந்த நாட்களில் குத்து விளக்கை சுத்தம் செய்யலாம். எப்போது செய்ய கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
குத்துவிளக்கை சுத்தம் செய்யக் கூடாத நாட்கள்:
* திங்கட் கிழமை நடுராத்திரி முதல் புதன்கிழமை நடுராத்திரி வரை குபேர தன தாட்சாயணி மற்றும் குககுரு தன தாட்சாயணி சக்திகள் விளக்கில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த நாட்களில் விளக்கை சுத்தம் செய்தால் அந்த சக்திகள் விலகிவிடும் என ஐதீகம்.
* வெள்ளிக்கிழமை நாளில் தேய்த்தால் குபேர சங்கநித யட்சணி விலகுவார் என நம்பப்படுகிறது.
சுத்தம் செய்ய உகந்த நாட்கள்:
ஞாயிறு: இந்த நாளில் விளக்கை சுத்தம் செய்து ஏற்றினால், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.
வியாழக்கிழமை: இந்த நாளில் சுத்தம் செய்தால், குரு கடாட்சம், அறிவு–செல்வம்–ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சனிக்கிழமை: இந்த நாளில் சுத்தம் செய்து விளக்கேற்றினால், வாகன விபத்துகள் மற்றும் தடைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.
Read more: தமிழகத்தில் ஒரு வாரம் மழை தான்.. எங்கெல்லாம் தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அலர்ட்..



