Cloudflare மீண்டும் முடக்கம்: உலகளாவிய செயலிழப்பால் பல முன்னணி வலைதளங்கள் பாதிப்பு..! முழு லிஸ்ட் இதோ..!

cloud fare

Cloudflare நிறுவனத்தில் உள்ளக சேவை குறைபாடு (internal service degradation) ஏற்பட்டதால், உலகளவில் பல முக்கியமான ஆப்ஸ் மற்றும் தளங்களில் இணைப்பு பிரச்சினைகள் ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. Downdetector என்ற தளத்தின் தகவல்படி, Zerodha, Canva, Zoom, Shopify, Valorant (கேமிங் ப்ளாட்பார்ம்) போன்ற தளங்கள் பாதிக்கப்பட்டன.. பயனர்கள் இந்த தளங்களில் அணுக முடியாமை, செயல்பாடு தாமதம் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டனர்..


இது Cloudflare பக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் ஏற்பட்ட தற்காலிக தடங்கல் என்றும், சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Cloudflare–ன் விளக்கம்

பயனர்கள் இந்த பிரச்சனையை அதிக அளவில் முன்வைத்த பிறகு, Cloudflare நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்தது.. “ஒரு தீர்வை செயல்படுத்தியுள்ளோம்.. அதன் செயல்திறனை கண்காணித்து வருகிறோம், தடையின் காரணத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்..” என அறிவித்தது.

மேலும், Cloudflare டேஷ்போர்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய API-களில் இன்னும் சிக்கல்கள் இருக்கலாம்.. சில கோரிக்கைகள் தோல்வியடையலாம் அல்லது பிழை செய்திகள் தோன்றலாம் என்றும் தெரிவித்தது.

Cloudflare என்றால் என்ன?

Cloudflare என்பது உலகின் மிகப்பெரிய இன்டர்நெட் நெட்வொர்க்க்களில் ஒன்று.
இது கோடிக்கணக்கான இணையதளங்களின் செயல்பாட்டை ஆதரிக்கிறது.. பெரிய நிறுவனங்கள் முதல் தனிப்பட்ட வலைப்பதிவர்கள் வரை அனைவரும் இதைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு வலைத்தள ஹோஸ்டிங் சர்வர் மற்றும் பயனர்கள் இருவருக்கும் இடையில் செயல்படும் ஒரு பாதுகாப்பு மற்றும் வேக மேம்பாட்டு அமைப்பு.

தளங்கள் வேகமாகப் பயன்படுவது, பாதுகாப்பான இணைய இணைப்பு, DDoS தாக்குதல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு போன்ற நன்மைகளை Cloudflare வழங்குகிறது..

Cloudflare முடங்குவது இதுமுதன்முறையல்ல.. 2 வாரங்களில் இது Cloudflare-இன் இரண்டாவது பெரிய உலகளாவிய கோளாறு. 10 நாட்களுக்கு முன்பு இந்த முடக்கம் காரணமாக பல தளங்களை பயனர்கள் அணுக முடியாமல் இருந்தனர்.. X (Twitter), OpenAI/ChatGPT, League of Legends, Spotify, Canva, Perplexity, Gemini, Grindr, Letterboxd போன்ற தளங்கள் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது…

Read More : உஷார்..! வைரலாகும் 19 நிமிட வீடியோ! ஆர்வத்தில் கிளிக் செய்தால் உங்கள் வங்கிக் கணக்கின் மொத்த பணமும் காலி..!

RUPA

Next Post

உங்க வீட்டில் மாலையில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்..!

Fri Dec 5 , 2025
வாஸ்து சாஸ்திரம் என்பது நமது வீடுகளின் அமைப்பு மற்றும் பொருட்களின் ஏற்பாடு மட்டுமல்ல, நமது அன்றாட பழக்கவழக்கங்களும் நம் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்று கூறும் ஒரு பண்டைய அறிவியல். வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க, சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் மிக முக்கியமானவை துடைப்பம் தொடர்பான வாஸ்து விதிகள். பொதுவாக, துடைப்பத்தை சுத்தம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம், ஆனால் வாஸ்துவின் படி, அது லட்சுமி தேவியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. […]
broom

You May Like