CM வீட்டு கிச்சன் டூர்..!! மண் பானையில் தான் சமையலே..!! அசத்தும் துர்கா ஸ்டாலின்..!! வீடியோ உள்ளே..!!

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் கிச்சன் டூர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கணவர் என்னதான் நாடறிந்த தலைவராக இருந்தாலும் இல்லத்தரசிக்கே உரிதான பண்புடன் வலம் வரும் துர்கா ஸ்டாலின் அவ்வப்போது கோவிலுக்கு செல்லும் புகைப்படங்க்ள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அவரின் கிச்சன் டூர் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிரபலங்கள் வீட்டு கிச்சன் என்றாலே அங்கு பல வெளிநாட்டு பொருட்களுடன் கூடிய அரங்காரங்கள் அதிகமாகவே இருக்கும். அதே சமயம் ஃபாஸ்ட் விரும்பும் இளம் தலைமுறையினர் ட்ரெண்டிங்கில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் பலரும் பழைய சமையல் சாதனங்களான அம்மி உரல் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துவதில்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக முதல்வர் வீட்டு கிச்சனில் தற்போதைய மாடர்ன் ட்ரெண்டில் இருந்தாலும் அம்மி, உரல், போன்ற பழங்கால சமையல் சாதனங்களுடன் சாதாரண பாத்திரங்களை வைத்துள்ளனர். தன் கையால் மணக்க மணக்க மீன் குழம்பு வைத்து பரிமாறினால் தனது கணவர் திருப்தியாக சாப்பிடுவார் என்று துர்கா ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள கிச்சன் டூர் வீடியோவில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் குக்கர் போன்ற தற்போதைய பாத்திரங்களை பயன்படுத்தாமல் மண் பாண்டங்களை பயன்படுத்தி சமையல் செய்கிறார். யூடியூப் சேனல் ஒன்றில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் அலுமனிய பாத்திரத்தில் சாதம் வடித்து மண் பானையில் குழம்பு வைக்கிறார் துர்கா ஸ்டாலின். இதை பயன்படுத்தவதுதான் தனக்கு எளிதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

Subscribe to my YouTube Channel

CHELLA

Next Post

சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இறந்த மாணவன் வழக்கில் 6 காவலர்கள் மீது கொலை வழக்கில் கைது!

Sun Mar 12 , 2023
செங்கல்பட்டை சார்ந்த சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் மரணமடைந்த சம்பவத்தில் மூன்று மாதங்கள் கழித்து ஆறு காவலர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்துள்ள கன்னடபாளையம் குப்பைமேடு பகுதியைச் சார்ந்தவர் பிரியா. இவரது கணவர் பழனிச்சாமி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஆறு குழந்தைகள். பிரியாவின் மூத்த மகன் கோகுல் ஸ்ரீ வயது 17. திருட்டு வழக்கு சம்பந்தமாக ஆறு […]
IMG 20230312 WA0052

You May Like