கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் மெளனம் கலைத்துள்ளார். சமபவம் குறித்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில், அனைவருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இப்படி ஒரு வலி மிகுந்த தருணத்தை நான் சந்திக்கவில்லை.. மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கும் பாசத்திற்கும் நான் எப்போதும் கடமை பட்டிருக்கிறேன். நானும் மனிதன் தானே.. இவ்வளவு பேர் பாதிக்கப்பட்ட போது என்னால் எப்படி திரும்பி சென்றிருக்க முடியும். சூழ்நிலையை கட்டுப்படுத்தவே கரூரை விட்டு கிளம்பினேன்.
ஏற்கெனவே 5 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தோம். அங்கெல்லாம் நடக்காமல் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது. மக்களுக்கு தெரியும். கரூர் மக்கள் நடந்த உண்மைகளை சொல்லும் போது கடவுளே வந்து சொல்வது போல் இருக்கிறது. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும். சிஎம் சார் கோபம் இருந்தாலோ பழி வாங்கும் எண்ணம் இருந்தாலோ என் மீது கை வையுங்கள். ஆனால் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள்” என கூறியுள்ளார்.
Read more: நடனமாடி கொண்டிருந்த 19 வயது இளம்பெண்.. திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..! வைரல் வீடியோ..



