நாகையை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் இன்று திருவாரூர் தெற்கு ரத வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. திருவாரூர் என்றாலே ஆழித்தேர் தான் நினைவுக்கு வரும்.. ஓடாமல் இருந்த இந்த திருவாரூர் தேரை ஓட்டுனது நான் தான் என்று மார்தட்டி சொல்லியது யார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. ஆனால் அவரின் மகன் மாண்புமிகு சி.எம். நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை நாலாபக்கமும் கட்டையை போட்டு நிறுத்திவிடார்.. இதை பெருமையாகவும், சவாலாகவும் சொல்லிக்கிறார்..
திருவாரூர் தான் சொந்த மாவட்டம் என்று பெருமையாக சொல்கிறார்கள்.. ஆனால் இங்க திருவாரூர் கருவாடாக காய்கிறது அதை கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.. எல்லா திட்டத்திற்கும் உங்க அப்பா பேரை வைக்கிறீங்க.. ஆனால் உங்கள் அப்பா பிறந்த இந்த திருவாரூர் மாவட்டத்தில் ஒரு அடிப்படை சாலை வசதி கூட சரியா இல்லையே சார்? நாகப்பட்டினம் மாதிரியே குடிசை பகுதிகள் அதிகமாக இருக்கும் ஊர் இந்த திருவாரூர் தான்..
இங்கு இருக்கும் பல்கலைக்கழகத்தில் எல்லா துறைகளும் இல்லை.. இங்கு இருக்கும் மருத்துவ கல்லூரியில் எல்லா உபகரணங்களும் வேலை செய்கிறதா? செய்யாதே.. திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு சரியாக சாலை வசதி இல்லை.. இந்த மாவட்டத்தில் ஒரு மந்திரி இருக்கிறார்.. அவரின் வேலை என்ன தெரியுமா? சி.எம். குடும்பத்திற்கு சேவை செய்றது தான் அவரின் வேலை..
உங்களுடன் ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் என்று உங்கள் குடும்பத்தினரிடம் மட்டும் சொல்ல வேண்டும்.. மக்களிடம் சொல்ல முடியாது.. ஏனெனில் நீங்கள் மக்களுடன் இல்லை. இந்த மாவட்டத்தில் இருக்கும் கொள்முதல் மையங்களில் நெல்லை ஏற்றி இறக்க 40 கிலோ மூட்டைக்கு ரூ.40 கமிஷன் வாங்குறாங்களாம்.. ஒரு டன்னுக்கு ரூ.1000 கமிஷன்.. இந்த 4 ஆண்டுகளில் இந்த டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கோடியாக கோடியாக கமிஷனை பிடிங்கி இருக்கிறார்கள்.. சி.எம். சார் இது உங்கள் ஆட்சியில் நடந்துள்ளது.. உங்களுக்கு வேண்டுமெனில் 40/40 என்றால் தேர்தல் முடிவாக இருக்கலாம்.. இந்த டெல்டா பகுதி விவசாயிகளுக்கு 40/40 என்றால் அது அவர்களின் வயிற்றில் அடித்து நீங்கள் வாங்கிய கமிஷன்.. இதுக்கு என்ன பதில் சொல்ல பொறீங்க?
பொய்யான தேர்தல் அறிக்கைகளை நாங்கள் கொடுக்கவே மாட்டோம்.. எது தேவையோ எது அடிப்படையோ அதை மட்டும் தான் கொடுப்போம்.” என்று தெரிவித்தார்..