ஒரே வீட்டில் தீபாவளி கொண்டாடும் CM ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, விஜய்..!! வைரலாகும் வீடியோ..!!

Diwali 2025 2

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ‘தீப ஒளித் திருநாள்’ எனப் போற்றப்படும் இந்தப் பண்டிகை, தமிழ்நாட்டில் தனிச் சிறப்புகளுடன், அலாதியான மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே, வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்களின் மனக்கண் முன் நிற்பது சொந்த ஊரும், அங்கே காத்திருக்கும் குடும்பமும்தான். வருடத்தின் இந்த ஒரு நாளுக்காகவே, பெரு நகரங்களில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊரை நோக்கி படையெடுப்பார்கள்.


தீபாவளி பண்டிகை என்பது, நரகாசுரனை வதம் செய்த தினமாக இது கொண்டாடப்படுவதால், அன்று அதிகாலையில், எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, தீமையின் அழுக்கைப் போக்கி, புத்துணர்ச்சி பெறுவதே இதன் ஐதீகம். புத்தாடை வாங்கும் படலம் பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன்பே களைகட்டிவிடும். வண்ணமயமான பட்டுப் புடவைகளும், ஜொலிக்கும் வேட்டி-சட்டைகளும் அணிந்த குடும்பத்தினர், கோவில்களில் சாமி தரிசனம் செய்யும்போது அந்தப் பகுதி முழுவதும் ஒருவித பொலிவு பெறும்.

அதேபோல், தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது இனிப்புகளும், பட்டாசுகளும் தான். இந்த இனிப்பு வகைகளை உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் பரிமாறி மகிழ்வது தமிழர்களின் கலாச்சாரம். இது அன்பையும், நல்லிணக்கத்தையும் பரிமாறிக் கொள்ளும் ஒரு பாலமாக அமைகிறது. இவற்றைத் தொடர்ந்து, வானை அதிர வைக்கும் பட்டாசு சத்தமும், மத்தாப்புகளின் வண்ண ஒளியும் தான் தீபாவளியின் உச்சக்கட்ட மகிழ்ச்சி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வானவெடிகள் வெடித்து மகிழ்வது, இந்தத் திருநாளின் தவிர்க்க முடியாத அங்கம். தீபங்கள் ஏற்றப்பட்டு, வீடு முழுவதும் பிரகாசமாக இருக்கும் அந்த மாலைப் பொழுது, மனதுக்கும் அமைதியையும், உற்சாகத்தையும் தருகிறது.

இந்த சூழலில் தான் அக்.20ஆம் தேதி மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தமிழக அரசியல் தலைவர்கள் தீபாவளி கொண்டாடுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் முக.ஸ்டாலின் தீபம் ஏற்றுவது போலவும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சீரியல் அலங்காரம் மற்றும் சாமி கும்பிடுவது போல் உள்ளது.

அதேபோல், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது போன்றும் புல்லட்டில் செல்வது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பட்டாசு வெடிப்பது போன்றும் உணவு சாப்பிடுவது போன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பட்டாசு வெடிப்பது போலவும், லட்டுக்களை எடுத்து வைப்பது போலவும் உள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குழந்தைகளுக்கு பலகாரங்கள் தயார் செய்து தருவது போன்றும் அவர்களுடன் நடனம் ஆடுவது போன்றும் இடம்பெற்றுள்ளது. அதேபோல், அன்புமணி ராமதாஸ் கையில் இனிப்புகளை வைத்திருப்பது போலவும், மலர்களால் வீட்டை அலங்கரிப்பது போன்றும் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ”இப்படி அனைவருமே இருந்தால் நமக்கு தினம் தினம் தீபாவளி தான்“ என்று பதிவிட்டுள்ளனர்.

Read More : இந்த ஒரு கோயிலுக்கு சென்றால் 1000 சிவாலயங்களை வழிபட்ட பலன் உங்களுக்கு கிடைக்கும்..!! தமிழ்நாட்டில் எங்கிருக்கு தெரியுமா..?

CHELLA

Next Post

நிதிச் சிக்கல்களைக் தீர்க்கும் ரகசிய தேங்காய் பூஜை..! எப்போது செய்ய வேண்டும்?. எப்படி செய்ய வேண்டும்?

Tue Oct 14 , 2025
செல்வத்தை ஈர்க்கவும், நிதி நெருக்கடிகளை நீக்கவும் விரும்புகிறீர்களா? தீபாவளி நாளில், லட்சுமி தேவியின் ஆசிகளைப் பெறவும், ஆண்டு முழுவதும் செழிப்பை அனுபவிக்கவும் இந்த ரகசிய தேங்காய் சடங்கைச் செய்யுங்கள். அதை எப்படி, எப்போது செய்வது என்று தெரிந்துகொள்வோம். இந்துக்களின் தீபாவளிப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. விநாயகர் மற்றும் லட்சுமி தேவியை வழிபட சடங்குகள் செய்யப்படுகின்றன. தீபாவளிக்கு முந்தைய நாள் […]
coconut auction

You May Like