தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை என தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த முறை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சிக்குள் இழுக்கும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு எதிராகச் செயல்படும் நிர்வாகிகளை நீக்கிவரும் அதேவேளையில், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியிலும் தீவிரமாக களமிறங்கியுள்ளார். குறிப்பாக, கொங்கு மண்டலமானது அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் நிலையில், அங்கே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே மாற்றுக் கட்சியினரை இணைப்பதற்கான கடுமையான போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், எஸ்.பி. வேலுமணி தலைமையில் தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆர். கார்த்திகேயன் உள்ளிட்டோர் திரளாக சென்று எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இது கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் களப்பணியை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : அதிகாலையிலேயே 2 நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம்..!! பீதியில் ஓடிய மக்கள்..!! தற்போதைய நிலை என்ன..?



