சென்னை மாநாகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவும் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உண்வு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.. அப்போது தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு எடுத்துச்செலும் வாகனங்களை கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
சென்னை மாநகராட்சியின் 31,373 தூய்மைப் பணியாளர்களுக்கான இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.64.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. அப்போது தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவை ருசி பார்த்த முதலமைச்சர் நன்றாக இருப்பதாக அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்..
இலவச உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் தூய்மை பணியாளர்களுக்கான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.. மேலும் பணியின் போது உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கான நிவாரணத் தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கினார்..
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாக இருப்பது தூய்மை தான்.. சென்னையை தூய்மையாக வைத்திருக்க காரணமானவர்கள் தூய்மை பணியாளர்கள்.. ஊரெல்லாம் உறங்கிய பின்னர், ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் நீங்கள் தான்.. உங்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல்களை பார்த்து நான் மட்டும் இல்லை இந்த சென்னை மாநகரமே நன்றியுடன் வணங்குகிறது.
இந்த மாநகரத்தை தூய்மையாக பாதுகாக்க வேண்டிய உங்களை பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை.. உங்கள் சுயமரியாதையை காத்து உங்கள் பசியை போக்க தான் இந்த திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.. சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவு வழங்கப்படும்.. நமது நலனுக்காக உழைக்கும் மக்களுக்கு உணவளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்ற் அடிப்படையில் தான் இந்த திட்டத்தை தொடங்கி உள்ளோம்.” என்று தெரிவித்தார்..



