சென்னை நந்தனத்தில் நடைபெறும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.. எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது திமுக ஐடி விங்கின் பங்கு அளப்பரியது.. களத்தில் கழகத்திற்காக உழைப்பவர்கள் போர் வாள், இணையத்தில் களமாடுபவர்கள் ஃபயர் வாள்.. நாம் தான் கண்டண்ட்-இல் கிங். 75 ஆண்டுகளை கடந்து இன்றும் ஆட்சியில் இருக்கும் மிகப்பெரிய கட்சி தான்.. நாம் செய்துள்ள திட்டங்கள் தான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது.. நவீன் தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதுவதே நாம் தான். அப்படிப்பட்ட நம்மை தமிழ்நாட்டிற்குள் நுழைந்து விட வேண்டும்..
தமிழ்நாட்டை சிதைக்க வேண்டும் என்று நம் எதிரிகள் நினைக்கிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் தான் அவதூறு.. அந்த அவதூறுகளுக்கு மட்டுமே பதில் சொல்லிக் கொண்டு இருக்காமல், சோஷியல் மீடியாவில் அஜெண்டாவையும் நாம் தான் செட் பண்ணனும்..
தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதுவதே நாம் தான். அப்படிப்பட்ட நம்மை தமிழ்நாட்டிற்குள் நுழைந்து விட வேண்டும்.. தமிழ்நாட்டை சிதைக்க வேண்டும் என்று நம் எதிரிகள் நினைக்கிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் தான் அவதூறு.. அந்த அவதூறுகளுக்கு மட்டுமே பதில் சொல்லிக் கொண்டு இருக்காமல், சோஷியல் மீடியாவில் அஜெண்டாவையும் நாம் தான் செட் பண்ணனும்..
டிஃபென்ஸ் மட்டுமே காட்டக்கூடாது.. அப்பப்ப அட்டாக் மோடுக்கும் செல்ல வேண்டும்.. சில நேரம் பதிவுகள் மூலம் அட்டாக் செய்யலாம்.. பொய் செய்திகளை பரப்புவதற்காகவே பாஜக பல போலி இணைய பக்கங்களை நடத்தி வருகிறது.. அதற்கும் பதிலடி கொடுங்கள்..
தோழமை கட்சிகளுடன் சிண்டு முடியும் வேலையை எதிர்க்கட்சிகள் செய்யும், அவர்களின் சூழ்ச்சிகளுக்கு எதிராக களமாடுங்கள்.. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி உறுதியான ஒன்று.. அதனை மிகப்பெரிய வெற்றியாக மாற்றும் சக்தி ஐடி விங்கிற்கு உண்டு. ஆன்லைன், ஆஃப்லைன் இரண்டிலும் திமுக தான் லயன் (Lion) என்று காட்டுவோம்.. வெல்வோம் ஒன்றாக..” என்று தெரிவித்தார்..



