சினிமா டிக்கெட் விலை மற்றும் மல்டிப்ளெக்ஸ்களில் உணவு, பானங்களுக்காக வசூலிக்கப்படும் அதிக விலைகள் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.. “விலைகள் நியாயமான அளவில் நிர்ணயிக்கப்படாவிட்டால் மக்கள் வரமாட்டார்கள்; சினிமா ஹால்கள் விரைவில் காலியாகி விடும்,” என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கர்நாடக அரசின் சினிமா டிக்கெட் விலையை ரூ.200 ஆக வரையறுக்கும் முடிவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.. இந்த உத்தரவை எதிர்த்து, மல்டிப்ளெக்ஸ் சங்கம் உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் இன்று நீதிபதி விக்ரம் நாத் மற்றும் ஜஸ்டிஸ் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது..
அப்போது நீதிபதி விக்ரம் நாத், மல்டிப்ளெக்ஸ்களில் விற்கப்படும் பொருட்களின் அதிக விலை குறித்து “நீங்கள் ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.100, ஒரு காபிக்கே ரூ.700 வசூலிக்கிறீர்கள்,” என்று தெரிவித்தார்.. அப்போது, மல்டிப்ளெக்ஸ் சங்கத்தின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “தாஜ் ஹோட்டல் ஒரு காபிக்கு ரூ.1000 வசூலிக்கிறது, அதை நீங்கள் கட்டுப்படுத்த முடியுமா?” எனக் கேட்டார்.
அதற்கு நீதிபதி விக்ரம் நாத் “இந்த விலைகள் நியாயமான அளவில் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஏற்கனவே சினிமா துறையின் நிலை சரியில்லை; மக்கள் வருவதற்கேற்ற விலை நிர்ணயம் செய்யாவிட்டால், சினிமா ஹால்கள் காலியாகிவிடும்.” என்று கூறினார்..
அப்போது முகுல் ரோத்தஹி “காலியாகட்டும், இது மல்டிப்ளெக்ஸ் மட்டும் தான். சாதாரண திரையரங்குகளுக்கு போகலாம், ஏன் இங்கு தான் வர வேண்டுமா?”
அப்போது “இப்போது சாதாரண திரையரங்குகள் எங்கே இருக்கின்றன? நாங்கள் உயர்நீதிமன்றத்தின் கருத்துடன் இணங்குகிறோம் — ரூ.200 வரம்பு சரியானது.” என்று நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்தார்..
ஆனால் முகுல் ரோஹத்கி, கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்த சில நிபந்தனைகள் நடைமுறையில் சாத்தியமற்றவை என்று வாதிட்டார், குறிப்பாக பணம் கொடுத்து வாங்கும் டிக்கெட்டுகளுக்கு வாங்குபவரின் அடையாள விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவு குறித்து கேள்வி எழுப்பினார்..
முன்னதாக, உயர்நீதிமன்றம் மல்டிப்ளெக்ஸ்கள் விற்கும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் ஆடிட் செய்யக்கூடிய பதிவுகளை வைத்திருக்க வேண்டும், ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வாங்குபவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும், வழக்கில் தோற்றால் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் வசதி இருக்க வேண்டும் எனவும், அவை சி.ஏ. (Chartered Accountant) மூலம் பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
Read More : ‘உங்கள் கோவில்களுக்கே போங்க’: பாகிஸ்தானில் ஹிந்து பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு..



