கல்லூரி பேராசிரியை மீது உடலுறவு ஆசை..!! ஃபுல் போதையில் ரூம் போட்டு மாறி மாறி சீரழித்த இளைஞர்கள்..!!

Kerala 2025 1

கேரள மாநிலத்தில் கல்லூரிப் பேராசிரியை ஒருவரை போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரோஸ் (28) மற்றும் அவரது நண்பரான கோட்டையம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்ட்டின் ஆண்டனி (27) ஆகிய இருவரும் ஒரு நிகழ்ச்சி மூலம் கல்லூரிப் பேராசிரியை ஒருவரைச் சந்தித்தபோது அறிமுகமானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அந்த பேராசிரியையை சதித்திட்டம் தீட்டி கொச்சிக்கு வருமாறு அந்த இருவரும் அழைத்துள்ளனர். இதையடுத்து, கொச்சிக்கு வந்த அப்பேராசிரியைக்கு, பிரோஸ் மற்றும் மார்ட்டின் ஆண்டனி இருவரும் சேர்ந்து உயர் ரகப் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை வலுக்கட்டாயமாகக் கொடுத்துள்ளனர்.

இதன் காரணமாக பேராசிரியை மயக்கமடைந்த நிலையில், களமஞ்சேரி மற்றும் நெடும்பாசேரி ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், இந்த கொடூரச் செயல் குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரிப் பேராசிரியை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், பிரோஸ் மற்றும் மார்ட்டின் ஆண்டனி ஆகிய இருவரையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். மேலும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பேராசிரியை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : “திமுக கூட்டணி வேண்டாம்”..!! விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேச்சு..!!

CHELLA

Next Post

அதிர்ஷ்டம் தரும் கேது பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்களுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்..! இதுல உங்க ராசி இருக்கா..?

Sun Oct 19 , 2025
Lucky Ketu transit.. For these zodiac signs, everything they touch will turn to gold..! Is your zodiac sign in this..?
rahu ketu

You May Like