“வீட்டுக்கு வா பேசணும்”..!! குடும்ப வழக்கை திருப்பிப் போட்ட வக்கீல்..!! இரவில் கதறிய 25 வயது இளம்பெண்..!! சென்னையில் பயங்கரம்..!!

rape 1

சென்னையில் குடும்பப் பிரச்சனையால் தவித்து வந்த இளம்பெண்ணின் நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புழல் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், தனது கணவர் மகேஷ் கண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், அவர் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாரும் அளித்திருந்தார். இந்த சூழலில், கடந்த 10-ஆம் தேதி அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தான் மகேஷ் கண்ணாவின் வழக்கறிஞர் என்றும், குடும்பப் பிரச்சனையைப் பேசித் தீர்த்து வைக்கலாம் எனவும் கூறி பெரம்பூரில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துள்ளார்.

வாழ்க்கை மீண்டும் சீராகும் என்ற நம்பிக்கையில் அங்கு சென்ற அந்தப் பெண்ணிடம், அந்த நபர் ஆபாசமாக பேசியதுடன், பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் துணிச்சலாக கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்துச் செம்பியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் வியாசர்பாடியைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் (68) என்பதும், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் டபேதாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் அம்பலமானது. ஒரு பெண்ணின் குடும்பச் சிக்கலை தனது காம இச்சைக்கு பயன்படுத்த முயன்ற அந்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More : 250 பேர்.. ரூ.55 லட்சம்..!! மொத்தமும் போச்சு..!! சொந்த கடனை அடைக்க மக்கள் பணத்தை சுருட்டிய கில்லாடி தம்பதி..!!

CHELLA

Next Post

உங்களுக்கு ‘ஓவர் திங்கிங்’ பிரச்சனையா..? உயிரையே பறிக்கும் அபாயம்..? ஆய்வு முடிவில் ஷாக்கிங் தகவல்..!!

Thu Feb 12 , 2026
“எப்போதும் எதையாவது யோசித்துக் கொண்டே இருக்காதே!” என்று யாராவது சொன்னால், நமக்கு எரிச்சல் வருவது இயல்பு. ஆனால், அந்த எரிச்சலை விட நாம் செய்யும் மிதமிஞ்சிய யோசனை நம் உடலுக்குள் விளைவிக்கும் பாதிப்புகள் மிகவும் பயங்கரமானவை என எச்சரிக்கிறது மருத்துவ அறிவியல். மன அழுத்தம் (Stress) என்பது ஏதோ மனதோடு முடிந்துவிடும் விஷயம் என்று பலரும் நினைக்கிறோம். ஆனால், அது நம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் மெல்ல மெல்ல விஷத்தைக் […]
Over Thinking 2026

You May Like