கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி.. 2022-ம் ஆண்டு முதன் முதலில் தமிழக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார்.. அவர் முழுமையாக வாசித்த ஒரே உரையும் இது தான். பின்னர் தமிழக அரசு – ஆளுநர் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதால் அவர் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை.. மேலும் தமிழக அரசை பற்றி பொது இடங்களிலும் ஆளுநர் கடுமையாக விமர்சித்து வருகிறார்..
அதுமட்டுமின்றி 2023. 2024, 2025,2026 என தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என்.ரவி வெளியேறினார்… ஆளுநரின் இந்த செயல் மக்களாட்சியை அவமதிக்கும் செயல் என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்..
எனினும் தமிழக அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில் பல உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தாதலும், தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாலும் உரையை படிக்க வில்லை என்று ஆளுநர் விளக்கம் கொடுத்திருந்தார்..
இந்த நிலையில் குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது..
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.. அதன்படி
குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.. ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காதது உறுதியான நிலையில் அமைச்சர்களும் புறக்கணித்தனர்..
ஆளுநர் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக வரம்பை மீறி செயல்படுவது, சட்டமன்றத்தை அவமதிப்பது, தொடர்ந்து அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது போன்ற காரணங்களால் இந்த முறையும் தமிழக அரசு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளது..
Read More : குடியரசு தின விழாவில் கம்பீரமாக அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார வாகனம்..! ஜல்லிகட்டு முகப்பு..!



