குஜராத்தை பூர்வீகமாக கொண்ட மென்பொருள் ஊழியர்களான நிரவ் மற்றும் கரிஷ்மா தம்பதியர், 2002-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, பணி நிமித்தமாக அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கு இவர்களுக்கு யஷ்வி என்ற பெண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியாக இருந்த இவர்களது 14 ஆண்டு கால திருமண வாழ்க்கை, ஒரு சிறிய தவறான புரிதலால் சிதைந்து போனது.
கடந்த ஜூலை 9, 2025 அன்று, பணி முடித்து வீடு திரும்பிய நிரவ், அலமாரியின் சாவியை தேடியபோது, மனைவி கரிஷ்மா தனது ஹேண்ட்பேக்கில் ஒரு மாற்றுச் சாவி இருப்பதாக கூறியுள்ளார். நிரவ் அந்த ஹேண்ட்பேக்கில் சாவியை எடுக்க முயன்றபோது, அதில் பயன்படுத்தப்படாத ஒரு ஜோடி ஆணுறைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், மனைவியின் நடத்தையை சந்தேகித்த நிரவ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கரிஷ்மா எவ்வளவோ மறுத்தும், தனக்கு இதில் சம்பந்தம் இல்லை என்று கூறியும், நிரவ் அதனை ஏற்க மறுத்துவிட்டார். இச்சம்பவம் நடந்த பிறகு, சுமார் இரண்டு மாதங்கள் வரை இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்துள்ளனர்.
பின்னர் விவாகரத்து வரை சென்ற இந்தச் சண்டையால், கடந்த மாதம் குஜராத் நீதிமன்றத்தில் இருவரும் விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்தனர். விவாகரத்து முடிவைச் சற்றும் எதிர்பாராத இவர்களது 14 வயது மகள் யஷ்வி, இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்த ரகசியத்தை உடைத்தார். தனக்கு பேட்ரிக் என்ற 19 வயது ஆண் நண்பர் இருப்பதாகவும், ஜூலை 7ஆம் தேதி பேட்ரிக் வீட்டிற்கு வந்தபோது, பாலியல் உறவுக்கு முயன்றதாகவும், ஆனால் தான் அதற்கு அனுமதிக்கவில்லை என்றும் யஷ்வி கூறினார்.
அந்த நேரத்தில் தாய் கரிஷ்மா எதிர்பாராமல் வீட்டிற்கு வர, பேட்ரிக் பாத்ரூமில் ஒளிந்து கொண்டான். அவன் கொண்டு வந்திருந்த ஆணுறை டேபிள் மீது இருந்ததாகவும், அதனை பார்ப்பதற்கு முன் மறைக்க முயன்றபோது, அது எதிர்பாராமல் அம்மாவின் ஹேண்ட்பேக்கிற்குள் விழுந்திருக்கலாம் என்றும் யஷ்வி கண்ணீருடன் கூறியுள்ளார்.
மகளின் உண்மையை அறிந்த நிரவ் நிலைகுலைந்து போய், தனது மனைவியிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டுள்ளார். ஆனால், கரிஷ்மா விவாகரத்தில் தீர்க்கமாக இருந்தார். “14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நீங்கள், ஒரே ஒரு ஆணுறைக்காக என் நடத்தையை சந்தேகித்தீர்கள். என் தரப்பு நியாயத்தைக் கேட்கக் கூட நீங்கள் தயாராக இல்லை. 3 மாதமாக என்னிடம் பேசவே இல்லை. நான் தனியாக வாழ பழகிவிட்டேன். இனிமேல் உங்களுடன் சேர்ந்து வாழ்வதில் அர்த்தம் இல்லை” என்று அவர் மறுத்துவிட்டார்.



