கழிவுநீர் குழாயில் குவியல் குவியலாக கிடந்த ஆணுறைகள்..!! பெண்கள் விடுதியில் நடந்த பயங்கர சம்பவம்..!!

Condom 2025 1

டெல்லியில் உள்ள ஒரு பெண்கள் தங்கும் விடுதியில் நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியின் கழிவுக் குழாய் அடைப்பு குறித்து துப்புரவுப் பணியாளர்கள் மேன்ஹோலை திறந்து பார்த்தபோது, உள்ளே கண்ட காட்சி அவர்களை திகைக்க வைத்தது. குழாய் அடைப்பிற்கு காரணமாக ஆயிரக்கணக்கான ஆணுறைகள் மற்றும் பிற கழிவுப் பொருட்கள் இருந்தன.


சுமார் 60 பெண்கள் தங்கியிருந்த இந்த விடுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்த நிர்வாகத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விடுதியைச் சுற்றியுள்ள பகுதியின் கழிவு நீர்க் குழாய்களும் அடைபட்டதால், இந்த விவகாரம் பொதுமக்களிடையேயும், பெற்றோர்களிடமும் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் வெளியே வந்த உடனேயே, விடுதியில் தங்கியிருந்த பெண்களை அவர்களின் பெற்றோர்கள் அவசரமாக அழைத்துச் சென்றனர். தற்போது விடுதி முற்றிலும் காலியாக உள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விடுதி நிர்வாகம் அளித்த தகவலின்படி, கடந்த சில நாட்களாகவே கழிவுக் குழாய் அடைப்புப் பிரச்சனை மீண்டும் மீண்டும் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர், “கடந்த 3 மாதங்களில் விடுதியின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளோம். அவற்றை ஆய்வு செய்து உண்மை நிலவரத்தைக் கண்டறிவோம்” என்று தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், இந்தச் சம்பவத்தில் எந்தவொரு குற்றவியல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளும் உடனடியாக உறுதி செய்யப்படவில்லை. இந்த விவகாரம் சுகாதாரப் பிரச்சனை மட்டுமல்லாமல், அப்பகுதிக்கும் அவப்பெயரைக் கொடுத்துள்ளதாகக் கூறி உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, பெண்கள் விடுதி நிர்வாகங்களுக்குப் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் முழுமையான விசாரணைக்குப் பிறகே மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : கலைஞரின் கனவு இல்லம் திட்டம்..!! பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் வரை கடன்..!! மக்களே இந்த தேதியை மிஸ் பண்ணிடாதீங்க..!!

CHELLA

Next Post

இந்த 5 தினசரி பழக்கங்கள் உங்கள் இதயத்திற்கு ஆபத்தானது; நிபுணர் எச்சரிக்கை..!

Thu Oct 30 , 2025
நமது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இதய ஆரோக்கியம் முக்கியமானது, மேலும் நாம் பின்பற்றும் சில ஆபத்தான அன்றாட பழக்கங்கள் இதய அழிவுக்கு வழிவகுக்கும். இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெர்மி, 5 தினசரி பழக்கங்கள் நமது நல்வாழ்வுக்கு எவ்வாறு மோசமானவை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அவ்வளவு மோசமானவை அல்ல என்று நாம் நம்பும் இந்தப் பழக்கங்கள் இதய ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜெர்மி கூறுகிறார். வேப்பிங் (மின்னணு சிகரெட்டுகள்) […]
Heart attack Chest Pain Symptoms

You May Like