திமுக – காங்கரஸ் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்ததால், கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற குழப்பம் நீடித்தது.. இன்று, திமுகவுடன் காங்கிரஸ் நடத்திய முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.. இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது “ காங்கிரஸ் சார்பில் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளோம்… எங்கள் தேவையை அவர்களிடம் கூறியுள்ளோம்.. அவர்கள் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.
திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாகவும், வெற்றிகரமாகவும் நடந்து கொண்டிருக்கிறது.. 1 ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக முதல்வர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்.. எனவே பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.. எந்த பிரச்சனையும் இல்லை. ஊடகங்களும் கூட்டணியில் பிரச்சனை என்று செய்திகள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும்..
இது கொள்கை சார்ந்த கூட்டணி, இயற்கையான கூட்டணி.. நம்பிக்கை உள்ளன.. எனவே ஊடகங்கள் இந்த கூட்டணியை சிதைக்க முயற்சிக்க வேண்டாம்.. இந்த கூட்டணி மதவாதிகளை விரட்டும் கூட்டணி.. ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ், பாஜகவை தமிழ்நாட்டில் விடமாட்டோம்.
நாங்கள் திமுக உடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.. கிரிஷ் ஜோடங்கரின் கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது.. வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக அவர் கூறவே இல்லை.. அவர் சொல்லாததை செய்தியாக்குகின்றனர்.. ராகுல்காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே திமுக உடன் கூட்டணி நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர்.. காங்கிரஸ் திமுகவை தவிர வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை..” என்று தெரிவித்தார்..



