ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் ஆதரவு தரக்கோரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு, செல்வப்பெருந்தகை, விஜய் வசந்த், கோபண்னா, கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி விஜய்வசந்த், எம்.எல்.ஏ அசன் மௌலானா ஆகியோரும் உடனிருந்தனர்..
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன் “ காங்கிரஸ் வேட்பாளராக இருக்கும் எனக்கு கமல் ஆதரவு தர வேண்டும்.. திமுக கூட்டணியில் சேர வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை கூறினோம்.. கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக அவர் கூறினார்.. கமல்ஹாசனின் ரத்தத்தில் தேசியமும் காங்கிரஸும் கலந்த ஒன்று என்று எல்லோருக்கும் தெரியும்.. காங்கிரஸையும் கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்பது தான் உண்மை.. ஒரு நல்ல முடிவை அவர் அறிவிப்பார் என்று நம்புகிறேன்..” என்று தெரிவித்தார்..
இடைத்தேர்தல் குறித்து கட்சியினருடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியினர் அவரை சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர்.. இந்த இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக களமிறமிறங்க வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.. மேலும் இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.. எனினும் கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..