தொகுதி பங்கீட்டில் இழுபறி.. டெல்லி செல்லும் இபிஎஸ்.. அமித்ஷா உடன் அவசர ஆலோசனை..!

deccanherald import sites dh files articleimages 2023 03 30 eps shah pti 1205076 1680189796

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என மும்முரமாக பணியாற்றி வருகின்றன.. இந்த சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு இன்னும் வெளிவராமல் தாமதமாகி வருகிறது..


அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆனால் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாததால், இந்த ஆலோசனையில் இழுபறி நீடித்து வருகிறது..

பாஜக அதிக தொகுதிகளை கேட்பதாகவும், அதிலும் அதிமுக வலுவாக உள்ள தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.. இதுவே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாஜகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான முடிவு எடுக்கப்பட்ட பிறகே மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது குறித்து முடிவு செய்ய முடியும் என்று அதிமுக கருதுகிறது.. இதனால் மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதும் தாமதமாகிறது.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளார்.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் இபிஎஸ் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்றிரவு சென்னைக்கு வர உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு செல்ல உள்ளார்..

டெல்லியில் அமித்ஷாவை நேரில் சந்திக்கும் இபிஸ், தமிழக அரசியல் நிலைமை, கூட்டணி அமைப்பு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.. அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக நீடிக்கும் இழுபறியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

மேலும் நடிகர் விஜய்யின் தவெகவும், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரின் நகர்வுகளும் அதிமுக வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.. இதனை சமாளிக்கும் வகையில் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று இபிஎஸ் கருதுகிறாராம்.. இதுகுறித்தும் அமித்ஷா உடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாம்..

Read More : Flash : ஜனநாயகன் ஷூட்டிங்கிற்காக கரூர் கூட்டம் பயன்படுத்தப்பட்டதா..? விஜய்யிடம் சிபிஐ அடுக்கடுக்கான கேள்வி..! பரபரப்பு தகவல்..!

RUPA

Next Post

கோடைக்காலத்தில் அதிகமாக இளநீர் குடிக்கிறீங்களா? அது எவ்வளவு ஆபத்தானதுன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!

Thu Mar 19 , 2026
கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில், பலர் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தர்பூசணி, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர் மற்றும் பல்வேறு பழச்சாறுகளை அருந்துகின்றனர். குறிப்பாக, தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலை நீரேற்றத்துடன் (hydrated) வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. மேலும், இதில் இயற்கையான எலக்ட்ரோலைட்டுகள் (மின்பகுளிகள்) நிறைந்துள்ளதால், கோடைக்காலத்தில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாட்டைத் தடுக்கவும் இது உதவுகிறது.. எனினும், இளநீர் உடலுக்கு […]
Coconut 2025

You May Like