பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் ‘வாரணாசி’ படத்தின் முதல் காட்சியை வெளியிடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக டீசர் வெளியீட்டில் சில தாமதங்கள் ஏற்பட்டன. அப்போது பேச்சை தொடங்கிய எஸ்.எஸ். ராஜமௌலி, “ஹனுமான் பக்தன் அல்ல” என்று தன்னைப் பற்றிய கருத்தை கூறி தனது உரையை தொடங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து பேசிய அவர் “ எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. அனுமன் துணை நிற்பார் என்று என் தந்தை கூறியது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது..” என்று தெரிவித்தார்..
ராஜமௌலியின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. மத உணர்வுகளை புண்படுத்தியதாக, அதே நேரத்தில் தனது படங்களில் புராணக் கதைகளைக் கொண்டு வருவதாகவும் பலர் விமர்சித்தனர்.
இந்த நிலையில், ராஷ்ட்ரீய வருண சேனா ராஜமௌலிக்கு எதிராக புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சரூர்நகர் காவல் நிலையத்தில் குழு புகார் அளித்துள்ளது. நிகழ்ச்சியில் ராஜமௌலி கூறிய ஹனுமான் தொடர்பான கருத்துகள் இந்து உணர்வுகளை புண்படுத்தியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
எனினும் இந்த புகார் குறித்து காவல்துறை இதுவரை மேலும் எந்த நடவடிக்கையும் எடுத்துள்ளதா என்பது தெளிவாக இல்லை.
மேலும், ‘வாரணாசி’ படத்தின் முதல் காட்சியிலும் இந்து மதத்துடன் தொடர்புடைய பல அடையாளங்கள் இடம் பெற்றுள்ளன, த்ரேதா யுகம், காவிக் கொடி, திரிசூலம்,
போன்ற பல மதச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
‘வாரணாசி’ ஒரு டைம்-டிராவல் படம், அதில் சை-ஃபை, அதிரடி, புராணம் ஆகியவை கலந்திருக்கும் படைப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரூ.1,200 கோடி என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்டோ முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்..



