முடிவுக்கு வரும் குக் வித் கோமாளி..!! வந்தது ’பிக்பாஸ் சீசன் 7’ அப்டேட்..!! அடடே இது புதுசா இருக்கே..!!

TRP-யின் நாயகனாக கடந்த சில வருடங்களில் இருந்து கலக்கி வருகிறது பிக்பாஸ். ஒவ்வொரு சீசனிலும் இந்த நிகழ்ச்சிக்கான TRP அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த வருடம் ஜனவரி மாதம் தான் 6-வது சீசன் முடிவுக்கு வந்தது. உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடங்கியிருந்தார்கள்.


இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது, எனவே பிக்பாஸ் வேலைகளில் குழுவினர் இறங்கியுள்ளதாக தெரிகிறது. தற்போது பிக்பாஸ் 7வது சீசன் அடுத்த மாதம் அதாவது ஜூலை 2வது அல்லது 4வது வாரத்தில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது, ஆனால், இதுவரை நிகழ்ச்சி குறித்த எந்தவொரு அப்டேட்டும் வெளிவரவில்லை.

இந்த சீசனில் போட்டியாளர்களை எப்படி தேர்வு செய்யப்போகிறார்கள் என்றால், இரண்டு செலிபிரிட்டிகள், மக்களுக்கு பரீட்சையமில்லாத இரண்டு செலிப்ரட்டிகள், சின்ன திரையை சேர்ந்த இரண்டு நடிகர்கள், தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் இரண்டு பேர், பொதுமக்களில் இருந்து மூன்று பேர், மாடலிங் துறையை சேர்ந்த இரண்டு பேர், சோசியல் மீடியா பிரபலங்கள் இரண்டு பேர், திருநங்கை 1, சமூக சேவை அல்லது அரசியலை சேர்ந்த இரண்டு பேர், பேச்சாளர்கள் இரண்டு பேர், அயல் நாட்டவர்கள் இரண்டு பேர் மற்றும் நடனம் ஆடுபவர்கள் இரண்டு பேர் என தேர்வு செய்யப்போகிறார்களாம்.

இதனால் மக்கள் யார் யார் வரப்போகிறார்கள் என இப்போதே பேச தொடங்கிவிட்டனர். அதேபோல் கடந்த சீசன் முடிக்கும் போது கமல்ஹாசன் மீண்டும் சந்திப்போம் என கூறிவிட்டு சென்றதால் அவரே 7-வது சீசனையும் தொகுத்து வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

CHELLA

Next Post

ட்விட்டரில் ஏற்பட்டு வரும் புதிய மாற்றம் - எலான் மஸ்க்

Tue Jun 13 , 2023
எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து ட்விட்டர் ஏடாகூடமாக மாறி வருகிறது. ட்விட்டர் தளத்தின் அடிப்படையான தத்துவத்தில் பலவற்றையும் மாற்றி அதிர்ச்சி அளித்தார். காசு கட்டினால் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை, எல்லா அப்டேட்டுகளும் விமர்சனங்கள் பெற்றாலும், அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இதுமட்டுமின்றி, புதிய அம்சங்களைத் தவிர, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் […]
elon musk twitter aa 1805665

You May Like