ரூ.4,851 மதிப்புள்ள குக்கர் ரூ.1,949-க்கு விற்பனை..!! பல சலுகைகளை அறிவித்த டி-மார்ட்..!! இல்லத்தரசிகளே உடனே கிளம்புங்க..!!

D Mart 2025

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியா முழுவதும் சில்லறை வணிகத் துறையில் பலவிதமான சலுகைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக, எப்போதும் “ஒவ்வொரு நாளும் குறைந்த விலை” என்ற கொள்கையை பின்பற்றும் டி-மார்ட், இந்த பண்டிகைக் காலத்திலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.


பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்கள் அதிகமாக ஷாப்பிங் செய்வது வழக்கம். குறிப்பாக, வாரம் முழுவதும் வேலைப்பளுவில் இருக்கும் மக்கள் ஞாயிற்றுக்கிழமையை ஷாப்பிங் தினமாக வைத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு, விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாகவே டிமார்ட் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டிமார்ட் பல்வேறு பிரிவுகளில் சலுகைகள் அறிவித்து, வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக பிஸ்கட், பானங்கள், மளிகை பொருட்கள், சமையல் பானைகள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் உள்ளிட்ட பலவகை பொருட்களில் விலை குறைப்பு அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, பிரிட்டானியா ஜிம் ஜாம் பாப்ஸ் பிஸ்கட் பாக்கெட், இயல்பாக ரூ.120க்கு விற்கப்படும் நிலையில், தற்போது வெறும் ரூ.60க்கு கிடைக்கிறது. அதேபோல், பிரிட்டானியா சீஸ் பாக்கெட், MRP ரூ.460 இருந்தும், தற்போது சலுகை விலையில் ரூ.230க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பெரிதும் தேடும் ஷானி ஃப்ரெஷ் டாய்லெட் கிளீனர் போன்ற சுத்திகரிப்பு பொருட்களிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது. MRP ரூ.225 என இருந்த 1 லிட்டர் பாட்டில், இப்போது ரூ.112க்கு கிடைக்கிறது.

மளிகைப் பொருட்களில் தத்வா துவரம் பருப்பு, வழக்கமாக ஒரு கிலோ ரூ.365 என்ற விலையில் விற்கப்படும் நிலையில், தற்போது அது ரூ.182க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சஃபோலா மீல் மேக்கர் ரூ.150க்கு விற்கப்படும் நிலையில், டிமார்ட்டில் வெறும் ரூ.75க்கு கிடைக்கிறது. பேரீச்சம்பழம், பருப்பு, மசாலா வகைகள் என பல பொருட்கள் பாதி விலைக்கு வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்காக சாக்லேட், பிஸ்கட் போன்றவற்றிலும் விற்பனை வேகமடைந்துள்ளது. சன்ஃபீஸ்ட் டார்க் ஃபேண்டஸி போர்பன் பிஸ்கட் ரூ.180 இருந்த விலை தற்போது ரூ.83க்கு விற்பனையாகிறது.

குறிப்பாக 5.5 லிட்டர் பட்டர்ஃபிளை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குக்கர், MRP ரூ.4,851 இருந்த விலை, இப்போது ரூ.1,949க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி, மாத இறுதியும் வருவதால், டிமார்ட் தனது பழைய ஸ்டாக்கை அகற்றும் முயற்சியாக மேலும் பல சலுகைகளை அறிவித்துள்ளது. பண்டிகை காலமும் சேர்ந்து வந்ததால், இப்போதில் இருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு டிமார்ட் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகள், குறைந்த விலையில் தரமான பொருட்கள் என்ற இரட்டைப் பயனாக அமையக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

Read More : SBI வாடிக்கையாளரா நீங்கள்..? உங்கள் சேமிப்புக் கணக்கு இனி செயல்படாது..!! வங்கி வெளியிட்ட ஷாக்கிங் அறிவிப்பு..!!

CHELLA

Next Post

உங்கள் படுக்கையறையில் மறந்துகூட இந்த 3 பொருட்களை வைக்காதீர்கள்!. ஏன் தெரியுமா?. எச்சரிக்கும் மருத்துவர்!

Sun Aug 24 , 2025
நிம்மதியான தூக்கம் மற்றும் ஓய்வெடுப்பதற்காக, பெரும்பாலான மக்கள் தங்கள் படுக்கையறையில் வசதியான மெத்தை, தலையணைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வைத்திருப்பார்கள். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, படுக்கையறையில் உள்ள சில பொதுவான பொருட்கள் உண்மையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆச்சரியப்படும் விதமாக, இவை கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் விஷயங்கள், ஆனால் சரியான நேரத்தில் மாற்றப்படாவிட்டால் அல்லது அகற்றப்படாவிட்டால், அவை உங்கள் நல்வாழ்வை அமைதியாகப் பாதிக்கலாம். […]
bedroom 11zon

You May Like