2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய படங்களில் ஒன்றாக ரஜினிகாந்தின் கூலி படம் உள்ளது.. இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ளது..
இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.. மேலும் பாலிவுட் ஜாம்பவான் அமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் 375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. எனினும் படம் ரிலீசாவதற்கு முன்பே, இப்படம் ப்ரீ ரிலீஸ் வணிகத்தில் லாபம் ஈட்டி வருகிறது.. படத்தின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 90% பணத்தை சன் பிக்சர்ஸ் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில், இயக்குனர் மற்றும் நடிகர்களின் சம்பளம் குறித்து நிறைய தகவல்கள் தெரிவிக்கின்றன.. கூலி படத்தில் நடிப்பதற்காக ரஜினி, ரூ.250 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.. இதன் மூலம் 74 வயதிலும், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக தனது அந்தஸ்தை மீண்டும் ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆமிர் கானின் சம்பளம் எவ்வளவு?
கூலி படத்தில் நடிக்க ஆமீர் கான் எந்த சம்பளமும் பெறவில்லை என்று கூறப்படுகிறது.. எனினும் ரஜினிகாந்த் மீதான மரியாதை காரணமாக ஆமிர் கான் கூலி படத்தில் நடித்ததாகவும், அவர் எந்த சம்பளமும் வாங்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆமிர் கானின் இந்த முடிவு, ரஜினிகாந்த் மீதான அவரது அபிமானத்தை எடுத்துக்காட்டுகிறது.
நாகார்ஜுனாவின் சம்பளம் எவ்வளவு?
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, சைமன் என்ற கேரக்டரில் வில்லனா நடித்துள்ளார்.. நாகார்ஜுனா இந்த படத்திற்காக ரூ.24 முதல் 30 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது..
ஸ்ருதிஹாசனின் சம்பளம் எவ்வளவு?
கூலி படத்தில் நடித்ததற்காக ஸ்ருதிஹாசன் ரூ.4 கோடி பெற்றதாக கூறப்படுகிறது… ரஜினியின் நண்பராக வரும் சத்யராஜின் மகளாக அவர் இந்த படத்தில் நடிக்கிறார்..
கூலி படத்தில் மோனிகா பாடலுக்கு பூஜா ஹெக்டே எவ்வளவு சம்பளம் வாங்கினார்?
கூலி படத்தில் மோனிகா பாடலுக்கு மட்டும் பூஜா ஹெக்டே நடனமாடி உள்ளார்.. இந்த ஒரு பாடலுக்காக, பூஜா ஹெக்டே ரூ.3 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோனிகா பாடல் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டாக மாறி உள்ளது..
சத்யராஜ் எவ்வளவு சம்பளம் வாங்கினார்?
பல வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்துடன், மீண்டும் இணையும் நடிகர் சத்யராஜ், இந்தப் படத்தில் தனது பாத்திரத்திற்காக ரூ.5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது..
உபேந்திரா சம்பளம் எவ்வளவு?
கன்னட நடிகர், உபேந்திரா ராவ் கூலி படத்தில் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
சௌபின் ஷாஹிரின் சம்பளம் எவ்வளவு?
ரஜினிகாந்தின் படத்தில் நடித்ததற்காக மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் ரூ.1 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது..
லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
கூலி படத்தை இயக்குவதற்காக லோகேஷ் கனகராஜ் ரூ.50 கோடி வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
அனிருத் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
கூலி படத்தில் இசையமைப்பதற்காக அனிருத் ரூ.15 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது..