“கூலி.. ஒன் மேன் ஷோ.. கடைசி 20 நிமிஷம் வாய்ப்பே இல்ல..” சொன்னது யார் தெரியுமா?

Coolie Rajinikanth

2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ரஜினிகாந்தின் கூலி படம் உள்ளது.. ரஜினியின் 171-வது படமாக உருவாகி உள்ள இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.. தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..


இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.. மேலும் பாலிவுட் ஜாம்பவான் அமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் 375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. எனினும் படம் ரிலீசாவதற்கு முன்பே, இப்படம் ப்ரீ ரிலீஸ் வணிகத்தில் லாபம் ஈட்டி வருகிறது.. படத்தின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 90% பணத்தை சன் பிக்சர்ஸ் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் கூலி படத்தின் சென்சாரின் போது படத்தை பார்த்ததாக கூறி, துபாயை சேர்ந்த உமைர் சந்து என்பவர் கூலி படத்தின் விமர்சனத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.. அவரின் பதிவில் “ கூலி ஒன் மேன் ஷோ.. ரஜினிகாந்த் மீண்டும் வந்துவிட்டார்.. படம் முழுவதும் தனது பவர் பேக் பெர்ஃபாமன்ஸ் மூலம் கவனம் ஈர்க்கிறார்.. படத்தின் மற்ற நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.. கதை, திரைக்கதை சுமார் தான்.. படத்தின் கடைசி 20 நிமிடங்களும், கிளைமேக்ஸ் தான் படத்தின் பெரிய பலம்..” என்று பதிவிட்டுள்ளார்.. மேலும் கூலி படத்திற்கு 5/3.5 என்ற ரேட்டிங்கை அவர் கொடுத்துள்ளார்..

உமைர் சந்து, துபாயை சேர்ந்த திரைப்பட விமர்சகர் என்று தன்னைத்தானே அறிவித்துக் கொள்கிறார். அவர் வெளிநாட்டு சென்சார் வாரியத்தில் உறுப்பினராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் சர்ச்சைக்குரிய விமர்சனங்களுக்கு பெயர் பெற்றவர்.. எனினும் அவர் வெறும் விளம்பரத்திற்காக போலி விமர்சனங்களை எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது..

இதனிடையே கூலி படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.. இதனால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கூலி படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியது. எனினும் இது டிக்கெட் முன்பதிவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.. வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை படத்தின் டிக்கெட்கள் ஹவுஸ்ஃபுல்லாகி விட்டது.. கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.. அதன்படி நாளை காலை 9 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் கூலி படம் வெளியாக உள்ளது..

Read More : “எப்படியாவது கூலி படத்தை ஓட வச்சுரு ஆண்டவா..” ராமேஸ்வரம் கோயிலில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு வழிபாடு..

RUPA

Next Post

8 ஆம் வகுப்பு போதும்.. ரூ.40 ஆயிரம் சம்பளம்.. மாவட்ட நல்வாழ்வு மையத்தில் வேலை..!!

Wed Aug 13 , 2025
8th grade pass is enough.. Rs.40 thousand salary.. Work at the District Welfare Center..!!
job2

You May Like