” எல்லாமே Copy Paste.. நீங்க ஒரிஜினலா..? ஓரமா போய் விளையாடுங்க Uncle..” விஜய்யை லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்த அதிமுக..!

1332588

சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் எப்போதும் போல திமுகவை கடுமையாக சாடினார்.. மேலும் அதிமுகவையும் சேர்த்து விமர்சித்தார்..


செல்ஃபே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு எல்லாம் வேலைக்கே ஆகாது.. இதை ஆணித்தனமாக அடித்து சொல்கிறேன்.. தேர்தலுக்கு பணத்தை கொட்டுவார்கள்.. பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.. அதை வாங்கிக் கொண்டு அவர்களின் காதில் விசிலை ஊதி அனுப்புங்க..

அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியும் என்று சொல்கிறார்கள்.. அதிகாரத்தை வைத்து பணத்தை கொள்ளையடித்ததை தாண்டி வேறு ஏதாவது அனுபவம் இருக்கிறாதா? அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் அரசியல்வாதிகளாக இருக்கும் ஒரு சவால், என்னை மாதிரி தனி ஆளாக கட்சி ஆரம்பித்து 1 சதவீதம் வாக்கு வாங்கும் தில்லு இருக்கிறதா? திராணி இருக்கிறதா?” என்று சவால் விடுத்தார்..

இந்த நிலையில் விஜய்யின் இந்த சவாலுக்கு அதிமுக காட்டமான பதிலடி கொடுத்துள்ளது.. நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle? அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க… வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், , புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஆகியோரைப் பார்த்து COPY PASTE uu….

அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி, COPY PASTE uu… இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? “தி.மு.க. எதில் எல்லாம் Out Of Control” என்பதை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், மாண்புமிகு புரட்சித் தமிழர் ஆணைக்கிணங்க நாமும் பதிவிட்டதைப் பார்த்து Copy அடித்து யாரோ எழுதிக் கொடுத்ததை, “Action” என்று சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய்…!!

சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா? கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பது போல, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், “அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்” என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது.

உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்? எங்கள் பெரியாரின் பெயரில், எங்கள் அண்ணாவின் பெயரில், எங்கள் புரட்சித் தலைவரின் பெயரில் சவாரி செய்வதை நீங்கள் நிறுத்துங்களேன் பார்ப்போம்!

எங்கள் முழக்கம் இன்றும் “அண்ணா நாமம் வாழ்க!” தான்! நாங்கள் என்றென்றும் புரட்சித் தலைவரின் “இரத்தத்தின் இரத்தமான” உடன்பிறப்புகள் தான்! நாங்கள் இன்றும், என்றும் முன்நிறுத்துவது எங்கள் இதயதெய்வம் “அம்மாவின் ஆட்சி”யைத் தான்!

“அம்மாவின் ஆட்சி அமைய அணிலாய்” இருந்ததாக சொல்லிய உங்களை, மிகப்பெரிய துயரத்தின் போது, 41 பேர் மரித்த போது பேசக்கூடாது என்ற “அம்மா கற்றுத் தந்த” அரசியல் பண்போடு தான் மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி
அவர்கள் நாகரிகத்தோடு நடந்துகொண்டார்.

அப்புறம் பனையூர் பண்ணையாரே… இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே? கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க Uncle!” என்று தெரிவித்துள்ளது..

RUPA

Next Post

இந்திய ரயில்வேயின் வெள்ளை ரகசியம்..!! ஏசி பெட்டிகளில் ஏன் கலர் விரிப்புகள் பயன்படுத்துவதில்லை..?

Fri Feb 13 , 2026
இந்திய ரயில்வே காலத்திற்கேற்ப தன்னை நவீனப்படுத்தி வருகிறது. வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்கள், சொகுசு இருக்கைகள் என பல மாற்றங்கள் வந்தாலும், ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் மட்டும் பல தசாப்தங்களாக மாறாமல் ‘வெள்ளை’ நிறத்திலேயே இருந்து வருகின்றன. பல வண்ணங்கள் இருக்கையில், ரயில்வே நிர்வாகம் ஏன் வெள்ளையை மட்டும் பிடிவாதமாகத் தேர்வு செய்கிறது என்பதற்குப் பின்னால் வலுவான அறிவியல் மற்றும் சுகாதாரக் […]
train

You May Like