நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது மீண்டும் பரவி வருகிறது. நாடு முழுவதும் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் நோய் கட்டுப்பாட்டு விதிகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மாநாடு உட்பட பல்வேறு பொது நிகழ்ச்சியின் மூலம் நோய் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கூட்டங்களை ரத்து செய்ய சுகாதாரத்துறை அறிவுறுத்த வேண்டும். இதுகுறித்து அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், அங்கு சுகாதாரம் பேணிக்காக்கப்படுகிறதா..? என்பது உள்ளிட்டவைகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. பெரியளவு பாதிப்புகள் இல்லாததால், நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு விரும்பவில்லை. தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் கிடையாது. கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Read More : முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தில் வேலை..!! மாதம் ரூ.60,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!