முதல் அறிக்கையில் திருத்தம்.. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே விளக்கத்தில் முரண்..

520920 1

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்கான காரணம் குறித்து முதலில் வெளியிடப்பட்ட அறிக்கையை திருத்தம் செய்து இரண்டாவது அறிக்கையை ரயில்வே வெளியிட்டது..

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. 5 பேர் வேனில் பயணித்த நிலையில், அவர்களில் 4 பேர் மாணவர்கள் என்றும், ஒருவர் ஓட்டுநர் என்று கூறப்படுகிறது.. பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது..


விபத்தில் படுகாயமடைந்த செழியன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி செழியன் உயிரிழந்துள்ளார். செழியனின் சகோதரி சாருமதி ஏற்கனவே இறந்த நிலையில், தற்போது செழியனும் இறந்துவிட்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பிள்ளைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..

இந்த வழக்கு தொட்பார் விசாரணை நடந்த நிலையில் ரயில்வே கேட்டை மூடாததால் 3 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து முதலில் வெளியிடப்பட்ட அறிக்கையை திருத்தம் செய்து இரண்டாவது அறிக்கையை ரயில்வே வெளியிட்டது.. கேட் கீப்பர் கேட்டை மூட முயன்றதாகவும், மூட வேண்டாம் என வேன் ஓட்டுநர் கூறியதாகவும் முதலில் அறிக்கை வெளியானது.. முதலில் வெளியிடப்பட்ட அறிக்கையை திருத்தம் செய்து இரண்டாவது அறிக்கையை ரயில்வே வெளியிட்டது.. 2வது அறிக்கையில் கேட் கீப்பர் கேட்டை மூடியதாகவும், திறக்க சொல்லி வேன் ஓட்டுநர் வலியுறுத்தியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது..

கேட் கீப்பர் தூங்கிவிட்டாரா..? தமிழ் தெரியாததும் காரணமா? விபத்து குறித்து ரயில்வே விளக்கம்..

RUPA

Next Post

தஞ்சாவூர்: கார் மீது சரக்கு வாகனம் மோதி 4 பேர் பலி.. சுற்றுலா வந்த இடத்தில் சோகம்..!!

Tue Jul 8 , 2025
தஞ்சாவூர் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சுற்றுலா வந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் உதாரமங்கலம் அருகே தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில், நாற்றுகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது சென்னையிலிருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்த வாகனம்(கார்) எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த போலீசார் […]
accident

You May Like