பெரம்பலூர், திருமாந்துறை டோல்கேட் அருகே ரவுடி வெள்ளைக்காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்ற போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்காக மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்த போது மர்மநபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்..
இந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த 2 போலீசார் படு காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனினும் போலீஸ் வாகனத்தில் இருந்த ரவுடி வெள்ளைக்காளி என்ன ஆனார் என்பது குறித்த தெளிவான விவரம் இல்லை.. ரவுடி வெள்ளைகாளி மீது 9 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
வெள்ளைக்காளியை கொல்ல முயற்சியா அல்லது அவரை தப்பிக்க வைக்க நடத்தப்பட்ட தாக்குதலா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
Read More : நாளை 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..! வானிலை மையம் வார்னிங்..!



