பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுனை கைது செய்ய முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
பட்டியலினத்தவர்கள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாக வீடியோ பதிவிட்டதாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரின் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கடந்த 2021-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.. பின்னர் இருவரும் ஜாமீனில் இருந்து வெளிவந்த நிலையில், மீரா மிதுன் கடந்த 2022-ம் ஆண்டு தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது..
இதனிடையே, இந்த வழக்கில் மீரா மிதுனின் தாயார் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.. அதில் தனது மகள் டெல்லி நகர வீதிகளில் சுற்றி வருவதாகவும், அவரை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது..
இந்த நிலையில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி போலீசாரால் பிடிக்கப்பட்ட மீரா மிதுன், அங்குள்ள அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறை தரப்பு தெரிவித்தது.. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, டெல்லி அரசு காப்பகத்தில் உள்ள மீரா மிதுனை கைது செய்து, அவரை ஆகஸ்ட் 11-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் படி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
Read More : “நாடாளுமன்றத்திற்குள் பசுக்கள் நுழைய வேண்டும்.. தாமதம் ஏற்பட்டால்..” எச்சரிக்கும் சங்கராச்சாரியார்..