தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..
எனினும் திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும் எனவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனவும் காங்கிரஸ் கூறி வருகிறது.. இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது..
இதனிடையே திமுக – காங்கரஸ் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்ததால், கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற குழப்பம் நீடித்தது.. கடந்த சனிக்கிழமை திமுகவுடன் காங்கிரஸ் நடத்திய முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் நடந்ததாகவும் செல்வப் பெருந்தகை தெரிவித்திருந்தார்..
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை காங்கிரஸ் எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. 40 தொகுதிகள் வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை ஏற்க திமுக தலைமை மறுத்துவிட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில் கூட்டணியை தக்கவைக்க, கடைசி வாய்ப்பாக முதலமைச்சரை இன்னும் சற்று நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் சந்தித்து பேச உள்ளார்.. திமுக உடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உறுதியாக இருக்கிறார்.. எனவே கூட்டணியை தக்க வைக்க முதலமைச்சர் இல்லத்தில் அவரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.. கூட்டணி முறிவை தடுக்க ப.சிதம்பரம் முதல்வருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே காங்கிரஸ் உடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலினும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.. காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்தும் முதல்வர் கேட்டறிய உள்ளதாகவும் தெரிகிறது.. அதே போல் காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்தால் எத்தனை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும் முதல்வர் திமுக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளாரம்..



