கிரிக்கெட் 1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் மட்டும் இடம் பெற்றது. அதில் இங்கிலாந்து அணி பிரான்சை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது. அதன் பிறகு கழற்றிவிடப்பட்ட கிரிக்கெட் தற்போது 128 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கால்பதிக்கிறது. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி மீண்டும் இணைக்கப்பட்டிருப்பது, உலகளாவிய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல விளையாட்டுப் போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை ஏற்பாட்டாளர்கள் திங்கள்கிழமை அறிவித்தனர். குறிப்பாக, கிரிக்கெட் போட்டி ஜூலை 12, 2028ஆம் தேதி தொடங்கும், பதக்கப் போட்டிகள் ஜூலை 20 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெறும்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி டி20 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கலிபோர்னியாவின் பொமோனாவில் உள்ள ஃபேர்கிரவுண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் கிரிக்கெட் போட்டிகளை நடைபெறும். இந்த மைதானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்திலிருந்து கிட்டத்தட்ட 48 கி.மீ தொலைவில் உள்ளது. “கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக, இந்த இடம் வருடாந்திர LA கவுண்டி கண்காட்சியின் தாயகமாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்துகிறது. பரந்த மைதானம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு கிரிக்கெட்டின் வெற்றிகரமான வருகைக்கு பின்னணியாக செயல்படும்” என்று LA28 தெரிவித்துள்ளது.
LA28 ஒலிம்பிக்கில் அணிகள் எவ்வாறு தகுதி பெறும்? இந்த மாதம் LA28 ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதிச் செயல்முறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தீர்மானிக்கும் என்று Cricbuzz தெரிவித்துள்ளது. ICC தரவரிசையின் அடிப்படையில் அணிகள் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புள்ள நிலையில், சில அசோசியேட் நாடுகளை உள்ளடக்கிய தகுதிப் போட்டிக்கான வாய்ப்பும் உள்ளது. இருப்பினும், இறுக்கமான எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை (FTP) கருத்தில் கொண்டு, இந்த பரிந்துரையை ICC பரிசீலிக்காமல் போகலாம்.
Read more: 2026-ல் தமிழ்நாட்டில் யார் ஆட்சி..? ‘Vote Vibe’ நடத்திய கருத்துக்கணிப்பில் மக்கள் சொன்ன பெயர்..