நடுத்தெருவில் ஊர்ந்து சென்று பீதியை ஏற்படுத்திய முதலை.. காருக்குள் பூட்டி வைத்த மக்கள்.. வைரல் வீடியோ..

Untitled design 2025 08 05T131341.489 1

உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரின் கடியானா நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பம்ப் அருகே ஒரு தெருவில் முதலை ஊர்ந்து செல்வதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. கங்கை நதியுடன் இணைக்கப்பட்ட ஒரு பெரிய வடிகால் வழியாக அந்தப் பகுதிக்குள் நுழைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.. இந்த முதலை 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் உள்ளூர்வாசிகளால் பிடிக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக ஒரு காருக்குள் பூட்டப்பட்டது.


அதிகாலை 2:00 மணியளவில் அப்பகுதியில் உள்ள நாய்கள் வெறித்தனமாக குரைக்கத் தொடங்கியபோது இந்த வினோதமான சம்பவம் நடந்தது. அப்பகுதி மக்கள் வெளியே எட்டிப் பார்த்தபோது, தெருவில் ஒரு முதலை வருவதைக் கண்டு அவர்கள் திகைத்துப் போனார்கள்.

இதையடுத்த் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. மேலும் ஜிதின் யாதவ், எஸ்பி மாவட்ட துணைத் தலைவர் ஜிதேந்திர வாஜ்பாய் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் உள்ளூர் மக்களுடன் இணந்து முதலையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்..

அந்த நேரத்தில் வன அதிகாரிகள் யாரும் அந்த இடத்தில் இல்லாததால், அப்பகுதி மக்கள் நிலைமையை சமாளித்தனர். கயிறுகள் மற்றும் மிகுந்த பொறுமையுடன் ஆயுதம் ஏந்திய அவர்கள், முதலையை அடக்கி, அதன் வாயைப் பாதுகாப்பாகக் கட்டி, தற்காலிகமாக கட்டுப்படுத்த ஒரு காருக்குள் வைத்தனர். பின்னர் அந்த ஊர்வன ஹயாத்புராவில் உள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு அது இரவு முழுவதும் தங்கியிருந்தது.

உள்ளூர்வாசிகளில் ஒருவர் இதுகுறித்து பேசிய போது “அதைப் பிடிக்க எங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆனது. யாரும் காயமடையவோ அல்லது விலங்கு தப்பிக்கவோ நாங்கள் விரும்பவில்லை,” என்று கூறினார். எனினும் இந்த தகவல் பரவியதால் முதலையை பார்க்க ஆர்வமாக காலையில் ஒரு பெரிய கூட்டம் கூடியது.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9:30 மணியளவில், வனத்துறை குழு வந்து முதலையை பாதுகாப்பாக ஒரு கூண்டில் மாற்றியது. கர்ரா நதியிலிருந்து அருகிலுள்ள விவசாய வயல்கள் வழியாக ஓடும் வடிகால் வழியாக வந்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் நீர்நிலைகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள், குறிப்பாக மழைக்காலங்களில், தடையின்றி செல்வது குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.

RUPA

Next Post

உத்தரகாண்ட் மேக வெடிப்பு.. அவசர உதவி எண்கள் அறிவிப்பு.. மீட்புப் பணியில் இந்திய ராணுவம்..

Tue Aug 5 , 2025
உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. அந்த வகையில் இன்று தாராலி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக சில நிமிடங்களிலேயே மிக அதிக கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.. இந்த நிலையில் இன்று பிற்பகல் 1:45 மணியளவில், இராணுவத்தின் ஹர்ஷில் முகாமில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள உத்தரகாசியிலுள்ள தாராலி கிராமத்திற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.. […]
Uttarakhand Cloudburst Today Live Updates PTI X 2025 08 e2d3a286d9db41966de768fdb477f7b2

You May Like