சென்னை போலீசார் மீது பக்கம் பக்கமாக புகார் தெரிவித்து தவறான உள்துறை செயலாளருக்கு சிடிஆர் நிர்மல்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய், அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். பெரம்பூரைத் தொடர்ந்து கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளிலும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, இதற்கான அனுமதியும் பெறப்பட்டது.
ஆனால், பெரம்பூரில் பிரச்சாரம் முடித்துக்கொண்டு கொளத்தூருக்கு செல்ல போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு சரியாக மேற்கொள்ளப்படவில்லை என தவெக சார்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. கெளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் சில நிமிடங்களிலே பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். தொடர்ந்து வில்லிவாக்கம் பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் விஜய் பிரச்சாரத்திற்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வில்லை, விஜயின் Y பிரிவு பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. விஜய் பிரச்சாரத்திற்கு அமித்ஷா உதவ வேண்டும் எனக் கோரி உள்துறை செயலாளருக்கு சிடிஆர் நிர்மல்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், தற்போதைய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் எனும் நிலையில் மணிப்பூர் ஆளுநராக உள்ள அஜய்குமார் பல்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். தவெகவில் ஏற்கனவே பல குழப்பங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், சென்னை போலீசார் மீது பக்கம் பக்கமாக புகார் தெரிவித்து தவறான உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியது பேசுபொருளாகியுள்ளது.
Read more: மதிய உணவுக்கு பிறகு குட்டி தூக்கம் போடுபவரா நீங்கள்..? அப்போ இந்த நன்மைகள் நிச்சயமா கிடைக்கும்!



