இந்திய உணவுப் பழக்கவழக்கங்களில் முக்கிய இடம்பிடித்திருக்கும் தயிர், சுவைக்காக மட்டுமின்றி ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பெரிதும் பாராட்டப்படுகிறது. புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாக விளங்கும் தயிர், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை மேம்படுத்தி செரிமான ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.
இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகின்றன. பலவீனம் மற்றும் சோர்வுடன் போராடுபவர்கள் தினசரி உணவில் தயிரைச் சேர்ப்பது புத்துணர்ச்சி அளிக்கும்.
தயிர் சாப்பிட சிறந்த நேரம் :
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தயிர் குளிர்ச்சியானவை என்பதால் அதை உட்கொள்ள சிறந்த நேரம் மதிய வேளை ஆகும். இந்த நேரத்தில் செரிமான செயல்பாடு உச்சத்தில் இருப்பதால், தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் எளிதில் உறிஞ்சுகிறது. ஆரோக்கியமான செரிமானத்திற்காக, தயிரில் வறுத்த சீரகப் பொடியைச் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும் என கூறப்படுகிறது.
இது மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. மேலும், தயிரில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது அதன் சுவையை அதிகரிப்பதுடன் கூடுதல் பலன்களையும் அளிக்கிறது.
இரவில் தயிர் சாப்பிடலாமா..?
தயிர் பலன் தரக்கூடியது என்றாலும், அதை இரவு வேளைகளில் அல்லது குளிர் காலங்களில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தயிரின் குளிர்ச்சியூட்டும் பண்பு காரணமாக, அதை இரவில் சாப்பிடுவது சளி, இருமல், சைனஸ் போன்ற சுவாசப் பிரச்சினைகளைத் தூண்டும் அபாயம் உள்ளது.
மேலும், இரவில் உடல் வெப்பநிலை இயல்பாகவே குறையும் நிலையில், குளிர்ச்சியான தயிரை உட்கொள்வது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, குறிப்பாக குளிர்ந்த நாட்களில், காலை மற்றும் இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read More : இவர்கள் முருங்கைக்காயை தொட்டால் ஆபத்து..!! உஷாரா இருங்க..!! இல்லைனா பிரச்சனை தீவிரமாகிவிடும்..!!