Flash : டிட்வா புயல்.. தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. பேய் மழை கொட்டும்..!

Montha Cyclone

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டிட்வா ’ புயலாக வலுப்பெற்றது.. இந்த புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.. இந்த புயல் திருகோணமலைக்கு (இலங்கை) தென்மேற்கே சுமார் 40 கிமீ தொலைவிலும், மட்டக்களப்பையில் இருந்து (இலங்கை) 100 கிமீ வடமேற்கே 100 கிமீ தொலைவிலும், காரைக்காலிலிருந்து (இந்தியா) 320 கிமீ தென்-தென்கிழக்கிலும், புதுச்சேரியிலிருந்து (இந்தியா) 430 கிமீ தென்-தென்கிழக்கிலும், சென்னையிலிருந்து (இந்தியா) 530 கிமீ தெற்கிலும் மையம் கொண்டுள்ளது..


இந்த டிட்வா புயல் இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா வழியாக வடக்கு-வடமேற்காக நகர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வட-வடமேற்காக நகர்ந்து, நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும் வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது…

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி இன்று நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமதாதபுர ஆகிய 5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

நாளை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருவாரூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

வரும் 30-ம் தேதி ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.. விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : திருவாரூர், மயிலாடுதுறையை தொடர்ந்து.. புதுக்கோட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் அரை நாள் விடுமுறை.!!

RUPA

Next Post

உலகில் சிறைச்சாலையும் இல்லாத, குற்றவாளியும் இல்லாத நாடு; எது தெரியுமா?

Fri Nov 28 , 2025
சிறைச்சாலைகள் இல்லாத, குற்றம் இல்லாத, திருட்டு இல்லாத, வன்முறை இல்லாத, அமைதி மற்றும் பாதுகாப்பு சூழல் மட்டுமே இருக்கும் ஒரு நாடு உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்.. இந்த நாடு மிகவும் சிறியது, ஆனால் நீதி மற்றும் சட்ட அமைப்பு மிகவும் வலுவானது, குற்றம் கிட்டத்தட்ட இல்லை. இதனால் தான் வாடிகன் சிட்டி உலகின் பாதுகாப்பான மற்றும் மிகவும் குற்றமற்ற நாடாகக் […]
vatican city 1

You May Like