டிட்வா புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதியில் நிலவுகிறது.. இந்த புயல் தற்போது வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே 150 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து தெற்கு – தென்கிழக்கே 250 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 350 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.. இந்த புயல் வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வட தமிழகம் – புதுவை – தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..
இந்த புயல் காரணமாக இன்று, நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காரைக்கால், புதுச்சேரிக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டிட்வா புயல் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை துறை குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை அனுப்பி உள்ளது.. அதில், கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், பலவீனமான கட்டிடங்கள் மரங்களுக்கு கீழே நிற்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read More : Flash : அடுத்த 3 மணி நேரத்திற்கு.. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் கனமழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்..!



