அடடே இது நல்லாயிருக்கே!… நூடுல்ஸ் மூலம் சாலையில் உள்ள குழிகளை மூடும் நபர்!… அரசின் கவனத்தை ஈர்க்க புதிய முயற்சி!

இங்கிலாந்து அரசின் கவனத்தை ஈர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நூடுல்ஸ் மூலம் சாலைகளில் உள்ள குழிகளை மூடிவரும் நபரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி மார்க் மோரல். இவர் அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல நல்ல பதிவுகளை தனது சமூகவலைத்தளபக்கங்களில் வெளியிட்டு பலரது
கவனத்தையும் பெற்றவர். அந்த வகையில், அவரது நகரத்தின் தெருக்கள் குழிகள் நிறைந்த சாலைகளாக இருப்பதை பார்த்த அவர், இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் Mr Pothole என்று அழைக்கப்படும் மார்க் மோரல், பள்ளங்களில் ரப்பர் வாத்துகளை வைத்து , ஓட்டைகளுக்கு பிறந்தநாள் கேக்குகளை வழங்குவது போல ஒரு விஷயத்தை செய்யலாம் என முடிவு செய்தார். ஆனால் அந்த திட்டம் தோல்வியில் முடியவே, இந்த விஷயத்தை புதிய விதத்தில் கையாள முடிவு செய்து பயங்கரமான குழிகளை கொண்டு அந்த ஓட்டைகள் எவ்வளவு மோசமாக உள்ளன என்பதைக் காட்ட, சேதமடைந்த சாலைகளில் தனது மதிய உணவை சமைக்க முடிவு செய்தார்.

அதன்படி ஒரு நூடுல் பிராண்டுடன் இணைந்து பள்ள குழிகளில் சமைப்பது போன்ற விஷயத்தை தொடர்ந்து செய்து வரும் அவர், தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும் சமூக ஊடகங்களில் இவரது பதிவுகள் வைரலாகி வருவதனால் கூடிய விரைவில் நல்ல தீர்வு வரும் என இங்கிலாந்துவாசிகள் எதிர்பார்க்கின்றனர். சமீபத்திய வரவுசெலவுத் திட்டத்தில் UK அரசு சாலைகளை சரிசெய்ய £200 மில்லியன் மட்டுமே ஒதுக்கியுள்ள நிலையில், முழுமையான தீர்வு பெற சுமார் £14 பில்லியன் செலவாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

KOKILA

Next Post

உலகில் முதன்முறையாக இந்தியாவில் கொடிய பூஞ்சை தொற்று உறுதி.. இது ஆபத்தானதா..? மருத்துவர்களின் விளக்கம் இதோ..

Sat Apr 1 , 2023
கடந்த 10 ஆண்டுகளில், கொரோனா வைரஸ், எபோலா வைரஸ், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், குரங்கு காய்ச்சல், மார்பர்க் வைரஸ் என முன்னெப்போதும் இல்லாத பல சுகாதார நெருக்கடிகளை உலகம் கண்டுள்ளது. அந்த வகையில் தற்போது அரியவகை வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.. கொல்கத்தாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு தாவர பூஞ்சை தொற்று (Plant Fungus) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. உலகின் முதல் பாதிப்பாக இது மாறியுள்ளது. பொதுவாக தாவரங்களைத் தாக்கும் ஒரு […]
37591c85 c22a 425e b484

You May Like