பாரில் டான்சர் வேலை..!! 23 வயது இளம்பெண்ணை சித்ரவதை செய்த தாய் – மகன்..!! சோசியல் மீடியா பழக்கத்தால் வந்த விபரீதம்..!!

Rape 2025 1

23 வயது இளம்பெண்ணை பல மாதங்களாக அடைத்து வைத்து தாயும், மகனும் சித்ரவதை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


மேற்கு வங்க மாநிலம் நார்த் 24 பர்ரகனாஸ் மாவட்டம் சோதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு டோம்ஜூர் பகுதியைச் சேர்ந்த நபருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த நபருடன் இளம்பெண் பேசி வந்துள்ளார். அப்போது, தனக்கு வேலை எதாவது கிடைக்குமா..? என இளம்பெண் கேட்டுள்ளார்.

அப்போது, அந்த நபர் தனது வீட்டிற்கு வந்தால் நிச்சயம் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி அந்த இளம்பெண்ணும் அந்த நபரை நேரில் சந்திக்க சோதேபூரிலிருந்து கிளம்பி ஜம்ஜூருக்கு சென்றுள்ளார். அந்த நபரின் வீட்டிற்கு சென்ற இளம்பெண்ணிடம், பாரில் டான்ஸராக வேலை பார்க்கும் படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்தப் பெண், இதை ஏற்க மறுத்துள்ளார். பின்னர், அந்த இளம்பெண்ணின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு, அவரது வீட்டிலேயே சிறை வைத்திருக்கிறார்.

மேலும், அந்த நபரின் தாயாரும் இளம்பெண்ணை வீட்டு வேலைகள் செய்ய நிர்பந்தித்துள்ளார். கடந்த 5 மாதங்களாக அந்த இளம்பெண் பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்துள்ளார். பின்னர், ஒரு நாள் அவருடைய வீட்டில் இருந்து எப்படியோ நைசாக தப்பித்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து, நடந்ததை எல்லாம் தனது பெற்றோரிடம் அவர் கூறி அழுதுள்ளார். இதையடுத்து, உடனே காவல்நிலையத்திற்கு சென்று அவர்கள் புகாரளித்தனர்.

இதையடுத்து, காவல்துறையினர் அந்த நபரின் வீட்டிற்கு சென்றபோது, தாயும் – மகனும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானது தெரியவந்தது. இதற்கிடையே, உடல் சித்திரவதைகளை அனுபவித்து வந்த இளம்பெண் சாகரதத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : தவெகவில் இன்று இணைகிறார் EX ஐ.ஆர்.எஸ்.அதிகாரி அருண்ராஜ்..!! மாநில அளவில் முக்கிய பொறுப்பு..!!

CHELLA

Next Post

கூகுளின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி AI தான்.. மனிதர் இல்லை..!! - சுந்தர் பிச்சை பதில்

Mon Jun 9 , 2025
கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் ப்ளூம்பெர்க் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், கூகிள் நிறுவனத்தின் எதிர்கால தலைமைத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். எதிர்காலத்தில் கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரி யார் என்று கேட்டபோது, ​​அவர் ஒரு சுவாரஸ்யமான பதிலைச் சொன்னார். அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி ஒரு மனிதராக இருக்கலாம். அல்லது அதை AI வழிநடத்தலாம். அவர் பதிலளித்தார். யார் […]
Sundar Pichai

You May Like