கேஸ் சிலிண்டரின் டியூபில் இருக்கும் ஆபத்து..!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!! இந்த தவறை செய்யாதீங்க..!!

காலம் மாற மாற அதற்கேற்றார் போல நமது பழக்க வழக்கங்களும் மாறிக் கொண்டே தான் இருக்கும். அப்போது வீட்டுக்கு வீடு விறகு அடுப்பு தான் இருக்கும்.. ஆனால் விறகு அடுப்பு என்று ஒன்று இருந்ததா என்று கேட்கும் அளவுக்கு தற்போது காலம் மாறிவிட்டது. காரணம் அனைத்து வீடுகளில் இப்போது கேஸ் அடுப்பு தான்.. கிராமங்களில் கூட கேஸ் அடுப்பு இல்லாத வீட்டை விரல் விட்டு எண்ணி விடலாம்.. ஆனால், அதேநேரம் கேஸ் சிலிண்டர் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் வந்துவிட்டதா என்றால் இல்லை என்பதே உண்மை.


அந்த வகையில், சிலிண்டரிலிருந்து அடுப்புக்கு சமையல் வாயுவை (LPG) கடத்திச் செல்லும் டியூப் (gas tube) பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. எனவே பல நேரங்களில் இந்த டியூப் நிலையை சோதித்திடாமல் இருந்துவிடுகிறோம். 5 வருடங்களுக்கு ஒருமுறை இந்த டியூப் கட்டாயம் மாற்றப்பட வேண்டும். மேலும், விலைகுறைந்த கலர்கலரான ரப்பர் டியூப்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்திய தரக்கட்டுப்பாட்டு கழகத்தால் பரிந்துரை செய்யப்பட்ட டியூப்களை மட்டுமே பயன்படுத்தினால் நல்லது. இந்த கேஸ் சிலிண்டர் டியூப் IS 9573, BS EN 1762, BS 4089, BS 3212, SI 764,ISO9001 என்ற தரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

அதிக வெப்பத்தையும், எளிதில் வெடிப்புகள் (cracks) உருவாகாத மூன்று லேயர் கொண்ட தரமான டியூப்களை பயன்படுத்த வேண்டும். அடுப்புடன் இணைக்கும் இடத்தில் அதன் வாய்ப்பகுதி விரிந்திருந்தால் டியூபை உடனே மாற்ற வேண்டும்.

CHELLA

Next Post

’ரொம்ப பயங்கரமான ஏரியா இருக்கும் போல’..!! இரவில் நடக்கும் மர்மம்..!! எங்கு இருக்கு தெரியுமா..?

Fri Feb 3 , 2023
உலகெங்கிலும் பல ஏரிகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஆனால், இன்று ஒரு விசித்திரமான ஏரியைப் பற்றி பார்க்க போகிறோம். அதன் அழகைக் கொண்டு மக்களை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஏரிக்குள் முழு காடும் மூடப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது, ​​மரங்கள் தண்ணீரில் வளர்கின்றன என்று தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இந்த விசித்திரமான ஏரி கஜகஸ்தானில் உள்ளது. இது ‘லேக் கேண்டி’ (Lake Kaindy) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏரியில் வித்தியாசமாக […]
’ரொம்ப பயங்கரமான ஏரியா இருக்கும் போல’..!! இரவில் நடக்கும் மர்மம்..!! எங்கு இருக்கு தெரியுமா..?

You May Like