கிரிக்கெட் வீரரான கேதர்ஜாதவ் விஐபி டிக்கெட் தரிசனத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில்சாமி தரிசனம் செய்த பின்னர் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை இந்திய அணி வீரர்கள் வெல்ல வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் கோவில் சார்பில்தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கேதர்ஜாதவ் திறமைவாய்ந்த கிரிக்கெட் வீரர். சென்னை சூப்பர்கிங், டெல்லி டேர்டெவில்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கொச்சி இட்டசுக்கேர்ஸ் கேரளா போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார். வலதுகை பேட்ஸ்மேனாகவும் , சுழற்பந்து வீச்சாளராகவம் திறம்பட செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.