திரையுலக வதந்திகள் என்பது மிகவும் பொதுவானவை. வதந்தி, கிசுகிசுக்களில் சிக்காத திரை நட்சத்திரங்கள் மிக மிக குறைவு.. அந்த வகையில் சமீபத்தில், தனுஷ் மற்றும் மிருணால் தாக்கூர் டேட்டிங் தொடர்பான தகவல்கள் பரவி வருகின்றன.. தமிழில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தென்னிந்திய மொழியிலும் தனது ஒரு ஸ்டார் ஹீரோ இமேஜை அடைந்துள்ளார். தனது மாறுபட்ட வேடங்களால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் கவனம் பெற்று வருகிறார்… சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படத்திற்கு கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது.. மேலும் தனுஷின் நடிப்பிற்கு பரவலான பாராட்டு கிடைத்தது
திரைத்துறையில் வெற்றிகரமான தனிப்பட்ட முறையில் சில சர்ச்சைகளால் செய்திகளில் உள்ளார். தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இதனிடையே, தனுஷ் பற்றிய டேட்டிங் வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன.. சீதாராமம் புகழ் பாலிவுட் நாயகி மிருணால் தாக்கூரை தனுஷ் காதலிக்கிறார் என்ற செய்தி ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மிருணால் தாக்கூரின் பாலிவுட் படமான ‘சன் ஆஃப் சர்தார் 2’ படத்தின் விளம்பர நிகழ்வில் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதை தொடர்ந்து தனுஷும் மிருணால் தாக்கூரும் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது.. மேலும் தனுஷ் தனது குடும்பத்தினருக்கு மிருணால் தாக்கூரை அறிமுகம் செய்து வைத்துவிட்டதாகவும், அவர்களுக்கும் இவர்களின் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்பட்டது.. எனினும் இதுகுறித்து தனுஷ் – மிருணால் இருவரும் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்..
இந்த நிலையில் மிருணால் தாக்கூர் சமீபத்தில் இந்த வதந்திகளுக்கு பதிலளித்தார்.. “தனுஷ் எனக்கு ஒரு நல்ல நண்பர். இதற்கிடையில் எங்களைப் பற்றி சில வதந்திகள் வந்துள்ளன என்பது எனக்குத் தெரியும். அவை என்னை சிரிக்க வைத்தன. ‘சன் ஆஃப் சர்தார் 2’ நிகழ்வில் தனுஷ் கலந்து கொண்டதாக தவறாக எண்ண வேண்டாம். அஜய் தேவ்கன் அவரது நெருங்கிய நண்பர். அவர் தனுஷை அந்த நிகழ்வுக்கு அழைத்தார். அதனால் தான் தனுஷ் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்.,” என்று அவர் ஒரு பேட்டியில் கூறினார்.
மிருணால் சொன்ன இந்த பதில் மூலம் இருவருக்கும் இடையிலான டேட்டிங் வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளன. இருப்பினும், சமூக ஊடகங்களில் வரும் கருத்துகள் நிறுத்தப்படுமா அல்லது வதந்திகள் தொடர்ந்து பரவுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.