சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் மிடாக்ஷரா சட்டத்தின் கீழ் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், “1956ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன் தந்தை இறந்திருந்தால், மகன்கள் இருக்கும் போது மகளுக்கு சொத்தில் உரிமை கிடையாது” என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பை நீதிபதி நரேந்திர குமார் வியாஸ் தலைமையிலான ஒற்றை பெஞ்ச் வழங்கியது. அதே நேரத்தில், மகன்கள் இல்லாத நிலையில் மகள்களுக்கு உரிமை உண்டு என்பதையும் தீர்ப்பு வலியுறுத்துகிறது. மிடாக்ஷரா சட்டப்படி, ஒரு ஆண் சம்பாதித்த சொத்துகள் அவரது ஆண் சந்ததியினருக்கே சென்றடையும்; ஆண் சந்ததி இல்லாதபோது மட்டுமே மற்ற வாரிசுகளுக்கு பகிரப்படும் எனவும் தீர்ப்பு கூறுகிறது.
மிடாக்ஷரா சட்டம் என்றால் என்ன? மிடாக்ஷரா என்பது இந்தியாவில் பெரும்பாலும் வட மற்றும் தென் இந்திய இந்துக்களிடம் பின்பற்றப்பட்ட பழைய வாரிசுச் சட்டம். இந்த சட்டத்தின் படி, ஒரு குடும்பத்தில் உள்ள சொத்து ஆண் சந்ததியினருக்கே தானாகப் போகும். அந்த காலத்தில் மகள்கள் குடும்ப சொத்துக்கு தானாக உரிமை பெற்றவர்களாக கருதப்படவில்லை.
1956ல் இந்து வாரிசுரிமைச் சட்டம் (Hindu Succession Act) இயற்றப்பட்ட பிறகு தான், மகள்களும் ஆண் குழந்தைகளைப் போல சமமான உரிமை பெறத் தொடங்கினர். ஆனால் அதற்கு முன் நடந்த மரணங்கள் மற்றும் சொத்து பிரிவுகளில் இந்தச் சட்டம் பின்விளைவாக (retrospective) பொருந்தாது என்பதே இத்தீர்ப்பின் முக்கிய அம்சம்.
வழக்கின் பின்னணி: இந்த வழக்கில், மேல்முறையீட்டாளரின் தந்தையும் பிரதிவாதி எண்.1-ன் தந்தையும் சகோதரர்கள். அவர்களின் தந்தை இறந்த பிறகு, சொத்துக்கு உரிமை பிரதிவாதி எண்.1-ன் தந்தைக்கு கிடைத்தது. பின்னர் அவர், அந்த சொத்தை தனது மகனான பிரதிவாதி எண்.1-ன் பெயரில் மாற்ற தாசில்தாரிடம் விண்ணப்பித்தார்.
இதைக் கேட்டதும், மேல்முறையீட்டாளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார், ஆனால் அதிகாரிகள் அந்த ஆட்சேபனையை நிராகரித்தனர். அதனால் மனமுடைந்த மேல்முறையீட்டாளர், “எனக்கும் சொத்தில் பங்கு உண்டு” என கூறி, சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
சிவில் நீதிபதி அந்த மனுவை ஆய்வு செய்து, “இந்த வழக்கில் தந்தை 1956 க்கு முன்பே இறந்துவிட்டார் என்பதால், பழைய மிடாக்ஷரா சட்டம் பொருந்தும்; அதனால் மகளுக்கு உரிமை இல்லை” என்று தீர்ப்பளித்தார்.
Read more: ட்விஸ்ட்.. விஜய் தலைமையில் கூட்டணி.. ஒகே சொன்ன டிடிவி தினகரன்..? செம ஷாக்கில் பாஜக – அதிமுக..!



