“மகள் கர்ப்பம்.. மாமியாருடன் உல்லாசமாக இருக்க துடித்த மருமகன்”..!! விடிந்து பார்த்ததும் ஊருக்கே காத்திருந்த பேரதிர்ச்சி..!!

Sex 2025 1

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் தனது மருமகனையே மாமியார் கொலை செய்து, தற்கொலை நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விருத்தாசலத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் வேல்முருகன், கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த குமுதா என்பவரின் மகள் பவித்ராவை திருமணம் செய்திருந்தார். உறவினர்களுக்குள்ளேயே நடந்த இந்தத் திருமணப் பந்தம், தொடக்கத்தில் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளது. பவித்ரா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், பிரசவத்திற்காக தாய் வீட்டில் தங்கியிருந்தார். மனைவியைப் பார்ப்பதற்காக அடிக்கடி மாமியார் வீட்டிற்கு வந்து சென்ற வேல்முருகனுக்கும், மாமியார் குமுதாவுக்கும் இடையே தகாத உறவு மலர்ந்துள்ளது.

சம்பவத்தன்று நள்ளிரவில், பவித்ரா அருகிலுள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, வேல்முருகன் குமுதாவின் அறைக்குச் சென்று தனிமையில் இருக்க வற்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. மகள் அருகிலேயே இருப்பதால் குமுதா அதனை மறுக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.

பின்னர், ஆத்திரத்திலும் பயத்திலும் குமுதா, வேல்முருகனின் கழுத்தை நெரித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கொலையை மறைக்கத் திட்டமிட்ட குமுதா, வேல்முருகனின் உடலை அறையிலேயே தூக்கில் தொங்கவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக ஊர் நம்பும் வகையில் நாடகமாடியுள்ளார்.

மறுநாள் காலை வேல்முருகன் தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வேல்முருகனின் தாய் மலர்க்கொடி அளித்த புகாரின் பேரில், வேப்பூர் போலீசார் விசாரணையில் இறங்கினர். டிஎஸ்பி சிவா மற்றும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பிரபு தலைமையிலான குழுவினர் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, குமுதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்குப்பிடியால் நிலைதடுமாறிய குமுதா, இறுதியில் தனது தகாத உறவு மற்றும் கொலையை ஒப்புக்கொண்டார். தற்போது குமுதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : உல்லாசமாக இருந்தபோது காதலி கேட்ட அந்த வார்த்தை..!! செம டென்ஷனான காதலன்..!! கல்லணையில் மிதந்த உடல்..!! ஷாக்கிங் சம்பவம்..!!

CHELLA

Next Post

கிரீம் பிஸ்கட்டுகளில் ஒளிந்திருக்கும் விஷம்..!! குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து..!! பெற்றோர்களே உஷார்..!!

Fri Jan 30 , 2026
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டுகளுக்கு நடுவே இருக்கும் இனிப்பான கிரீம், பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தையும் தனக்குள் ஒளித்து வைத்துள்ளது. மாலை நேர தேநீருடனும், குழந்தைகளின் விருப்பமான சிற்றுண்டியாகவும் மாறிவிட்ட இந்த கிரீம் பிஸ்கட்டுகள், உண்மையில் உடலுக்குள் மெதுவான விஷமாக (Slow Poison) செயல்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பிஸ்கட்டிற்குள் இருப்பது பாலில் இருந்து எடுக்கப்பட்ட சுத்தமான கிரீம் கிடையாது; அது வனஸ்பதி அல்லது டால்டா எனப்படும் […]
Cream Biscuit 2026

You May Like